பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

செந்தமிழ் பெட்டகம்


மிகுதியும் தோன்றிய பொழுது அவற்றின் வாழ்வு சிறு கதைகளையே நம்பி இருந்தது. 'மணிக்கொடி' போன்ற இதழ்கள் சிறுகதை எழுதுவதை ஒரு தனித் தொழிலாக வளர்க்க உதவின. பல தாள்கள் தோன்றினமையின் சிற்ந்த கதைகளைப் பெற்றவையே போட்டியில் நிலை பெற முடியும் என்ற நிலை ஏற் பட்டது. சிறு கதை என்ற பெயரில் எதை வேண்டுமானலும் எழுதி வெளியிடலாம் என்று நிலை மாறத் தொடங்கியது.

பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு ஏற்பப் படிப்பவரின் தொகையும் மிகுதியாயிற்று.அதிக மக்கள் படிக்கத் தொடங்கினவுடன் அவர்கள் திறனாய்வும் சிறப்படையத் தொடங்கியது. மக்கள் சிறந்தவை இவை என்று அறியத் தொடங்கினவுடன் கதை எழுதுபவர்களும் உயர்ந்த கதைகளை படைக்க முனைந்தனர். இந்நிலையில் மேனாட்டுச் சிறுகதைகளைத் தமிழ் மக்கள் சிலர் ஆதரிக்கலாயினர். இக்கதைகளை அப்படியே மொழி பெயர்த்தும், பெயர்களை மட்டும் மாற்றியும் வெளியிட்டனர். வேற்று நாட்டு நிலைக்களத்தில் வேற்றுப் பண்பை அடிப்படையாகக் கொண்ட கதைகள் பல தமிழில் வெளிவரலாயின. இவற்றையும் தமிழ் மக்கள் விரும்பிப் படித்தனர்.

தமிழில் சிறந்த சிறு கதைகள் படிக்க வேண்டும் என்ற மக்கள் ஆர்வமும் சிறந்த கதைகளை வெளியிட வேண்டும் என்ற பத்திரிகைகளின் ஆர்வமும், மேனாட்டுக் கதைகளின் சிறப்பியல்புகளைக் கொண்ட தமிழ்க் கதைகள் எழுத வேண்டும் என்ற எழுத்தாளரின் ஆர்வமும் சேர்ந்து சிறந்த சிறுகதை ஆசிரியர்களைப் படைத்தன.

உலக இலக்கியங்களுள் இடம் பெறக்கூடிய சிறந்த சிறுகதைகள் இன்று தமிழ்மொழியில் உண்டு.

இன்று தமிழ் நாட்டில் அளவற்ற வார இதழ்களும் திங்கள் இதழ்களும் தோன்றியுள்ளமையின் எண்ணற்ற