பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

181


சிறுகதை எழுத்தாளர்கள் உள்ளனர். பழைய நாளைப் போலப் பிறநாட்டுக் கதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதும் பழக்கம் இன்று மிகுதியாக இல்லை. தமிழ் நாட்டுச் சூழ்நிலையில் தமிழருடைய பண்பாட்டுக்கு முரணில்லாத வகையில் சிறந்த குண சித்திரங்களை விளக்கும் பாத்திரங்களைக் கொண்ட சிறுகதை களைப் படைக்கும் எழுத்தாளர் பலர் இன்று தமிழ் நாட்டிலே உள்ளனர்.

மேனாட்டுச் சிறுகதை :

இலக்கிய நந்தவனத்தில் இப்பொழுதுதான் சிறு கதை என்ற மலர் முழு வனப்பொடு அலர்ந்திருக்கிறது. ஆனால், அதன் வேர் மனிதப் பிறப்போடு தோன்றி விட்டது. இருண்ட பண்டைக்காலத்தில் நீக்கமுடியாது அச்சம் மிகுந்த நிலையில் மனிதன் கதைகள் புனைந்து வாழ்க்கைக் கசப்பை மறந்து வாழ்ந்தான். நீண்ட பழைய பஞ்ச தந்திரக் கதைகளும் அரபிக் கதைகளும் நாம் கருதுகிறபடி சிறுகதைகள் ஆகா.

சிறுகதை பிறந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. நவீன நாகரிகத்தின் மனிதனுக்கு நிற்கப் பொழுதில்லை. ஒட்டமும் பிடியுமாயுள்ள இந்தச் அசுரவேக வாழ்க்கைப் பரப்பில் சிறுகதை தோன்றாமல் என்ன செய்யும்? பெரிய நாவல்களையோ, இதிகாசங்களையோ படித்து இன்புறப் பொழுதில்லை.

எட்கர் ஆலன் போ என்ற ஆசிரியர் சிறுகதைக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார். சிறுகதை என்பது அரைமணியிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குள் படித்து முடிக்கக் கூடிய அளவு கொண்ட கதையாகும்.

சிறுகதை குறுகிய நாவலன்று; நாவல் இனம் வேறு; சிறுகதை இனம் வேறு. நாவல் பல சுவைகளைக் காட்டும்; பல பாத்திரங்களைச் சித்திரிக்கும். சிறுகதையில் ஒரு சுவைதான் மிளிர்ந்து நிற்கும். சொற் சிக்கனம் வேண்டும். எனினும் குறுகிய அளவிற்றான் இருக்க