பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

17

 களால் எழுதிக் காட்டுகின்றார் கம்பர். 'அஞ்சொல் இளமஞ்ஞை என, அன்னம் என, மின்னும் வஞ்சி என நஞ்சம் என வஞ்கமகள் வந்தாள்’ என்பார் கம்பர். மெல்லிசை வண்ணம் என்று தொல்காப்பியர் கூறும் அழகிற்கு ஒர் எடுத்ததுக் காட்டாகும். இத்தகைய சூர்ப்பனகை மானபங்கமுற்ற நிலையில் சீற்றம் தலைக்கொண்டு பேசும்பொழுது வல்லோசை நிறைந்த சொற்களால் அவள் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சியை உணர்த்துகின்றார் கவிஞர். 'காற்றினிலும் கனலினிலும் கடியானைக் கொடியானைக் கரனை உங்கள் கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன்' என்று அவள் பேச்சில் வல்லோரையின் வண்ணத்தைக் காணலாம்.

தமிழின் சிறப்பெழுத்தாகிய ழகரத்தின் செம் மையை இலக்கிய வழக்கினைத் தழுவிப் போற்றியுள்ளார் கம்பர். மக்கள் பேசும் மழலை மொழிகளால் பெற்றோர் அடையும் இன்பத்தைக் “குழலினிது யாழினிது என்ப, தம் மக்கள், மழலைச்சொற் கேளா தவர்” என்றார் திருவள்ளுவர். இக் குறளில் ழகரம் மூன்று அமைந்து செவிக்கு இன்பம் பயக்கின்றன. இவ்விபத்தை நுகர்ந்த இளங்கோவடிகள் குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த மழ கோவடிகள்' குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த மழலைச் சொல்லுடையாள் கண்ணகி என்று சிலப்பதிகாரத்திலே பாடினார். வள்ளுவரும் இளங்கோவும் காட்டிய நெறியைப் பின்பற்றி, “ குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய, மழலை மென்மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்” என்று கம்பர் இசைத்த பாட்டில் ஐந்து ழகரம் அழகுற அமைந்ழதுள்ளன. இவ்வாறு முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றும் தன்மை கம்பர் பவிதையிற் காணப்படும் சிறப்புக்களுள் ஒன்றாகும்.

செ. பெ.-ll-2