பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

191


களும் கதைகளும் இலக்கியவுலகில் அமரத்தன்மை பெற்று விளங்குகின்றன.

இருபதாம் நூற்றாண்டில் கட்டுரை இலக்கியம் மிகச் சீரிய முறையில் வளர்ந்து வருகின்றது. இன்று கதையும் கட்டுரையும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து வருகின்றன என்றும் கூறலாம். மக்களுக்கு இன்பமூட்டும் வகையில் பல துறைக் கட்டுரைகளும் வெளிவருகின்றன. விஞ்ஞானம், கணிதம், வரலாறு, தத்துவம், பொருளியல், அரசியல் ஆகியவை பற்றிய கட்டுரைகள் அளவின்றி வெளிவந்து மக்களை மகிழ்விக்கின்றன. இவையேயன்றிச் செய்தித் தாள்களின் ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளும் ஆங்கில இலக்கியத்தை அழகு செய்கின்றன. ஜீ.கே. செஸ்ட்டர்ட்டன், ஈ.வி. லுாக்காஸ், ஜே.பீ. பிரீஸ்ட்லி போன்ற ஆசிரியர்களும் உயர்தரக் கட்டுரைகளை எழுதி வருகின்றார்கள்.

முடிவாகக் கூறுமிடத்துக் கட்டுரைகள் அமைப்பானது காலத்திற்குக் காலம் மாறுபடும் தன்மையது என்று கூறலாம். பேக்கனுடைய கட்டுரைகளில் மாணிக்கம் போன்ற கருத்துகள் விளங்குகின்றன. அடிசன், கோல்டுஸ்மித் போன்றவர்களின் கட்டுரைகளில் சமுதாயச் சீர்திருத்தத்தின் சாயலுண்டு. சார்லஸ் லாம்ப் எழுதிய கட்டுரைகள் மனித உள்ளங்களையும் மக்கட் பண்புகளையும் காணலாம். ஆர்.எல். ஸ்டீவென்சனின் கட்டுரைகள் பல திறப்பட்ட வாழ்க்கையின் உருவங்களாகவே தோன்றுகின்றன.

ஆனால் இன்றைய இலக்கியவுலகில் நீண்ட கட்டுரைகளைக் காண்டல் அரிது. எனினும் கலைகளின் சாயலும், இலக்கியப் பொலிவும், நடையழகும். உள்ளன. எனவே கட்டுரை எழுதுவதை ஓர் அருங்கலையென்றே கூறவேண்டும்.