பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

செந்தமிழ் பெட்டகம்


கலைக்களஞ்சியங்கள் இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு முக்கியமான பொருளுக்கும் தனித் தனியாகவும் கலைக் களஞ்சியம் தயாரித்துள்ளார்கள்.

ஆதியில் தயாரிக்கப்பட்ட களஞ்சியங்களில் வரலாறு, இலக்கியம் முதலிய விஷயங்களே அதிகமாக இடம் பெற்றன. ஆனால் இக்காலத்தில் விஞ்ஞானமே வெகு முக்கியமான தேவையாயிருப்பதால், இப்பொழுது காணப்படும் களஞ்சியங்களில் விஞ்ஞானத்துக்கே அதிக இடம் தந்து வருகிறார்கள். பிரிட்டானிக்கா நூல் இதற்கு நான்கில் ஒரு பங்கு இடத்தை அளித்திருக்கிறது.

பிரிட்டானிக்காவின் பதினான்காவது பதிப்பைத் தயாரித்த பொழுது ஆசிரியர் குழாம் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இருந்து வேலை செய்தது. ஆயினும் அமெரிக்க விஷயங்கள் அதிக இடம் பெறவில்லை என்ற காரணத்தால் அமெரிக்கர்கள் தங்கள் நாட்டு விஷயங்களை அதிகமாகச் சேர்த்து என்சைக்கிளோப்பீடியா அமெரிக்கானா என்று ஒரு கலைக்களஞ்சியத்தை 30 தொகுதிகளில் தயார் செய்திருக்கிறார்கள். இது போலவே ஒவ்வொரு நாட்டாரும் களஞ்சியம் தயார் செய்யும் பொழுது தத்தம் நாட்டு விஷயங்களுக்குச் சிறப்பான இடம் அளித்து வருகிறார்கள்.

கலைக்களஞ்சியம் தயாரிக்கும் பொழுது கீழ்க்கண்ட கருத்துகளை மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

கலைக்களஞ்சியத்தில் பல நாட்டு விஷயங்களும் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு நாட்டு வரலாறு, கலை, இலக்கியம் முதலிய பண்பாட்டு விஷயங்களை அந்தந்த நாட்டார் எழுதுவதே சாலவும் நன்று.

மத விஷயங்களைப் பற்றி அந்தந்த மதத்தவரே எழுதுவது நல்லது; ஆனால் பிற மதத்தினரைப் புண்படுத்தாத முறையில் எழுத வேண்டும்.