பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

செந்தமிழ் பெட்டகம்


என்னும் பெயரால் வெளியிடலானார் ஆனால் இது முற்றுப் பெறாமல் மூன்று தொகுதிகளுடன் நின்று விட்டது. பின்னர் தவிடி ஜமின்தாரான பிரசாத் பூபாலுடு என்பர் ஆந்திர விஞ்ஞான என்ற பெயரில் 7 தொகுதிகள் கொண்ட களஞ்சியம் ஒன்று 1938-ல் வெளியிட்டுள்ளார்.

1920ஆம் ஆண்டில் எஸ்.வீ. கெட்கெர் என்பவர் மராத்தி மொழியில் மகாராஷ்டிரீய ஞான கோஷ் என்ற பெயரில் ஒரு கலைக்களஞ்சியம் வெளியிட்டார்.

1934ஆம் ஆண்டில் அமூல்ய சரன் வித்யாபூஷன் என்பவர் வங்காளி மொழியில் பங்கிய மாகோச என்னும் கலைக்களஞ்சியத்தை வெளிட்டார்.

1936ஆம் ஆண்டில் எஸ்.கரந்த என்பவர் கன்னட மொழியில் பால பிரபஞ்ச என்னும் கலைக்களஞ்சியத்தை மூன்று தொகுதிகளாக வெளிட்டுள்ளார்.

திரு. பீ. கோபால் ரெட்டி அவர்களைத் தலைவராகக் கொண்ட ஆந்திர பாஷா சமிதி தெலுங்கில் விரிவான கலைக்களஞ்சியம் வெளியிட வேலை செய்து வருகிறது. ஆந்திர விஞ்ஞான சர்வஸ்வமு என்ற பெயர் கொண்ட இந்நூலில் இதுவரை இரண்டு தொகுதிகள் வெளி வந்துள்ளன. இக்களஞ்சியம் எல்லாப் பொருள்களையும் அகரவரிசையில் கொண்டதாக இல்லாமல் தனித்தனிப் பொருளுக்குத் தனித் தனித் தொகுதியாக அமைந் துள்ளது.

இந்திய யூனியன் அரசாங்கத்தார் இந்தியில் கலைக் களஞ்சியம் தயாரிக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். தமிழிலும் கலை, விஞ்ஞானம் முதலான எல்லாத் துறைகளையும் கொண்ட விரிவான கலைக்களஞ்சியம் ஒன்றை உண்டாக்கத் தமிழ் வளர்ச்சிக் கழகம் (த.க.) முயன்று வருகிறது.

இந்தியா சுதந்திரம்பெற்ற திருநாளாகிய 1947 ஆகஸ்டு 15ஆம் தேதியன்று தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்