பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

201


தலைவராகிய திரு. தி. சு அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள் கலைக்களஞ்சியம் ஒன்றைத் தமிழில் உருவாக்க வேண்டுமென்றும், அதற்குப் பொது மக்கள் அனைவரும் உதவ வேண்டுமென்றும் ஒர் அறிக்கை வெளியிட்டார். மக்கள் இதை ஆதரித்ததோடு பல அன்பர்கள் இம்முயற்சிக்குத் தாராளமாக நன்கொடை கொடுக்கவும், பல அறிஞர்கள் இப்பணியில் கலந்து ஒத்துழைக்கவும் முன்வந்தனர்.

சென்னை அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் இம்முயற்சிக்கு ஆதரவளித்தன. இவ்வகையான உதவிகளைக் கொண்டு இம்முயற்சி தொடங்கப் பெற்றுள்ளது. ஆங்கிலம் முதலிய மேனாட்டுக் கலைக் களஞ்சியங்களில் உள்ளன போலவே இதில் கலைத்துறைகள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. ஏராளமான விளக்கப் படங்கள் முதலியவற்றோடு பத்துத் தொகுதிகளில் வெளியிடுவதாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுதியும் 750 பக்கங்கள் கொண்டதாக இருக்கும் இதில் பயன்படுவதற்காகப் பல அறிஞர்களின் உதவியைக் கொண்டு தனித்தனி உட்குழுக்கள் அமைத்துச் சுமார் இரண்டு ஆண்டுகள் வேலை செய்து, ஆயிரக்கணக்கான கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கலைக் களஞ்சிய வேலையைத் திட்டமிடவும், ஒவ்வொரு துறையிலும் சேர்க்கப்படவேண்டிய பொருள்களைத் தேர்ந்தெடுக் கவும், அப்பொருள்களைப் பற்றி எழுதத் தகுதி வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கவும் சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் ஏ. லஷ்மண சுவாமி முதலியார் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு குழுவில் பல அறிஞர்கள் வேலை செய்தார்கள். இதுவரை கலைக்களஞ்சியத்தில் முதல் மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இக்கலைக் களஞ்சியம் உருவாக்கு வதன் முயற்சி பற்றிய விரிவான குறிப்பு இறுதித் தொகுதியின் முகவுரையில் வரும்.