உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

205


அது முதல் ஏட்டுச் சுவடிகளைத் தொகுத்து ஆராய்ந்து, பழைய தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் தொண்டில் ஈடுபட்டார். - -

சிந்தாமணிக்குப் பின் பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை என்பவை வெளியாயின. புறநானூறு தமிழகத்தின் பழைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவியது. ஐயரவர் களின் பெருமையும், அறிவும், நேர்மையும், பதிப்புத் திறமையும் தமிழ் மக்களைக் கவர்ந்தன. அப்பால் ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்னும் தொகை நூல்களை இவர் வெளியிட்டார். பெருங்கதை என்னும் பழங்கதை வெளி வந்தது. புறப்பொருள் வெண்பா மாலை, நன்னூல் மயிலைநாதர் உரை, நன்னூல் சங்கர நமசிவாயர் உரை, தமிழ்நெறி விளக்கம் என்னும் இலக்கணங்களைப் பதிப்பித்தார்.

இவற்றையன்றி நம்பி திருவிளையாடல், திருக்காளத்திப் புராணம் முதலிய புராணங்களையும் ஆராய்ந்து வெளியிட்டார். கோவை, உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ், இரட்டை மணிமாலை, மும்மணிக் கோவை, பரணி, அந்தாதி, குறவஞ்சி முதலிய பலவகைப் பிரபந்தங்களும் குறிப்புரையுடன் வெளிவந்தன. தம்முடைய ஆசிரியர் இயற்றிய பிரபந்தங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு தொகுதியாக வெளியிட்டார்.

ஏட்டில் இருப்பதை அப்படியே பெயர்த்துக் காகிதத்தில் அச்சிடும் வேலை அன்று இவர் செய்தது. ஏட்டில் உள்ள பாடல் பிழைபட்டிருக்கும். பல இடங்களில் இன்னதென்றே ஊகிக்க முடியாத அளவுக்குச் சிதைவு உண்டாகியிருக்கும். அவற்றையெல் லாம் பலநூற் பயிற்சியாலும், இயற்கையான அறிவுத் திறமையாலும், விடாமுயற்சியாலும், திருவருளின் துணையாலும் ஆராய்ந்து செப்பம் செய்யவேண்டும். ஐயரவர்கள் திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து தாமே