பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீர்க்கத்தரிசி


மகாகவிபாரதி



தமிழின் மறுமலர்ச்சி யுகம் ஒன்றை அண்மையில், தோற்றுவித்த பெருஞ் சக்திகளில் ஒன்று பாரதியாரின் புதுமைக் கவிதை விடுதலையுணர்ச்சியைத் தமிழகத்தில் கவிதை வாயிலாகத் துண்டிய பாரதியார் 1882-ல் கார்த்திகைத் திங்களில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டையபுரத்தில் தோன்றினார்.

பாரதியாரின் தந்தையான சின்னசாமி ஐயரும் இவ்வூர் ஜமீந்தாரின் அவைப்புலவர்களிடையே சிறப்பான பதவி பெற்றிருந்தார். தமிழிலும், தருக்கத்திலும், கணிதத்திலும் பயிற்சியுடன் நுண்ணறிவும் நாவன்மையும் வாய்க்கப் பெற்றிருந்த அவர், தம் பிள்ளையின் உள்ளம் தொடக்கத்திலிருந்தே கணிதப் பயிற்சியில் தோய்ந்து வருமாறு முயற்சி செய்து பார்த்தார்; எனினும். இவரோ அவருக்குத் தெரியாமல் கவிகள் இயற்றிக் கொண்டிருப்பார்; அக்கவிகளை ஜமீன்தாருக்கு வாசித்துக் காட்டுவார்.

பாரதியாரின் இயற்பெயர் பாட்டனாரின் பெயராகிய சுப்பிரமணியன்’ என்பது. அவரைச் சுப்பையா என்று அழைத்தது போல் இவரையும் செல்லமாக 'சுப்பையா’ என்று அழைத்தார்கள்.

பாரதியின் உடல் மெலிந்து வலிமையற்றிருந்தது. ஆயினும் தந்தையார் தம் மகனுடைய உடல் வளர்ச்