புலவர் த. கோவேந்தன்
215
1914ஆம் ஆண்டு முதல் ‘சுதேசமித்திரன் பாரதியாரின் கட்டுரைகளையும், நகைச்சுவைக் கதைகளையும், பாடல்களையும் பிரசுரித்து மாதந்தோறும் பொருளுதவி செய்து வந்ததால், வறுமைத் துயரம் பாரதியாருக்கு ஒருவாறு குறைந்தது எனலாம். தாகூரின் சிறுகதைகள் சிலவற்றையும் கட்டுரைகள் சிலவற்றையும் இவர் தமிழில் மொழி பெயர்த்தார். 'காங்கிரஸ் சரித்திரம்’ ஒன்றும் இவரால் எழுதப்பெற்றுச் ‘சுதேசமித்திரனு’க்கு அனுப்பப் பட்டது. அதில் சுமார் ஐம்பது அத்தியாயங்கள் வெளிவந்தன.
1918 நவம்பர் 20-ல் பாரதியார் புதுவையை விட்டுப் புறப்பட்டுப் பிரிட்டிஷ் எல்லையில் அடி வைத்தார்; உடனே கைது செய்யப்பட்டுக் கடலூர்ச் சிறையில் வைக்கப் பெற்றார். அங்கே 1918 டிசம்பர் 14ஆம் தேதி வரை இருந்தார். சுதேசமித்திரன் ஆசிரியரான ஏ. ரெங்கசாமி ஐயங்கார் முதலியவர்களின் முயற்சியால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலை பெற்றார். விடுதலை பெற்றதும் தம் மனைவியின் ஊரான கடையம் போய்ச் சேர்ந்தார். பிறகு அடிக்கடி திருநெல்வேலி நகரத்திற்கு வந்து தமது பாஞ்சாலி சபதம் முதலியவற்றைப் பாடி மக்களிடையே பரப்பினார். -
பாரதியார் 1920-ல் சென்னைக்கு வந்து மறுபடியும் சுதேசமித்திரனில் வேலைக்கு அமர்ந்தார். மாலை வேளையிலும் ஒய்வு நேரங்களிலும் நண்பர்களுடனும் சீடர்களுடனும் அளவளாவுவதும் கூட்டிங்களில் பேசுவதும் பாடுவதுமாய்ப் பொழுது போக்கினார். ஒரு நாள் இரவு பதினொரு மணிவரை நடைபெற்ற கூட்டத்திலே ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்று தொடங்கும் சமதருமப் பாட்டைப் பாடினார்.
திருவல்லிக்கேணியில் குடியிருந்த பாரதியார் ‘காக்கை குருவி எங்கள் சாதி' என்ற தமது கெர்ள்கைக்கு இணங்கப் பார்த்தசாரதி கோயில் யானையிடத்திலும்