216
செந்தமிழ் பெட்டகம்
நட்புரிமை கொண்டார். வழக்கம் போல் ஒரு நாள் யானைக்குச் சிற்றுண்டி அளிக்கச் சென்ற போது அது இவரைத் தூக்கி எறிந்து விட்டது. காயமுற்று உணர்விழந்து யானைக்குச் சற்றுத் தூரத்தில் கிடந்த பாரதியாரை நண்பர் குவளைக்கண்ணன் தூக்கி யெடுத்துக் காப்பாற்றினார். ஆனால், காயம் குணமான போதிலும் சீதபேதி ஏற்பட்டுப் பாரதியார் 11-9-1921-ல் காலமானார். இவரது உடலை அடக்கம் செய்ய இவர் வீட்டில் பொருள் இல்லை. நண்பர்களின் பொருளுதவி கொண்டு அந்த இறுதிக் கடன் நிறைவேறியது.
பாரதி நூல்கள் :
பாரதியாரின் தேசியப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், ஞானப் பாடல்கள், நீதிப் பாடல்கள், சமூகப் பாடல்கள், வசன கவிதை, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகிய பலவகை நூல்களிலும் தேச பக்தியே உயிர்நாடியாகப் பேசுகிறது. இவையெல்லாம் தமிழ்மொழிக்குப் புதிய சுவையும் தமிழர்களுக்குப் புதிய கருத்தும் உணர்வும் தந்து நிற்பனவாகும்.
பாரதியார் தேசியப் பாடல்களில் சமதர்ம சன்மார்க்க நிலையைச் சுட்டிக் காட்டினார். பழைய பெருமையின் சாரத்தைப் போற்றுவதுடன் தற்கால வீழ்ச்சி நிலையையும், சுதந்திரப் போரில் ஈடுபட்ட பிற நாடுகளின் நிலையையும் பாடியிருக்கிறார். தேச பக்தியையும் தெய்வ பக்தியின் நிலைக்கு உயர்த்த முயன்றிருக்கிறார்.
தோத்திரப் பாடல்களும் ஞானப் பாடல்களும் :
மக்கள் அனைவரும் ஒரு குலம், ஓர் இனம் என்ற கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர். இவர் ‘பாருக்குள்ளே தெய்வம் ஒன்று, இதில் பற்பல சண்டைகள் வேண்டா' என்று பாடிச் சமயங்களுக்கிடையே சகோதர உணர்ச்சி நிலவ வேண்டும் என்ற