உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

செந்தமிழ் பெட்டகம்


தீண்டாமை ஒழிப்பில் ஆர்வம் கொண்ட வ.உ.சி. தம் வீட்டிலேயே ஹரிஜன சாமியார் ஒருவருக்கு ஆதரவு தந்தார். நந்தனார் பள்ளித் தலைவர் சுவாமி சகஜானந்தம் (ஹரிஜன்) வ.உ.சி. யிடம் குறள் கற்றவர். விதவை மணம் சிலவற்றையும், கலப்பு மணம் சிலவற்றையும் வ.உ.சி. நடத்தி வைத்தமை சமூகச் சீர்த்திருத்தத்தில் இவருக்கிருந்த ஆர்வத்துக்குச் சான்று.