பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வங்கக் கவி


ரவீந்திரர்



உலகப் புகழ்பெற்ற வங்க மகாகவியும் நாட்டுப் பற்று நாவலருமான பெரியார் 1861 மே ஏழாம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். இவருடைய தந்தையாரான தேவேந்திரநாத டாகுர் மிகச் சிறந்த அறிஞர்; ஒழுக்கத்தில் உயர்ந்தவர். அதனால் அவர் மகரிஷி என்று அழைக்கப் பெற்றார். ரவீந்திரர் மகரிஷியின் கடைசி மைந்தர்.

இவருடைய குடும்பத்தார் ஜமீந்தார்கள்; பிராமண வகுப்பினர்.

ரவீந்திரருடைய பாட்டனார் துவாரகநாதர் இளவரசர் என்று அழைக்கப் பெற்றார். அவர் ராம்மோகன் ராயின் நண்பர். அவருடன் சேர்ந்து சமூக சீர்திருத்தத்துக்கு உழைத்தவர். இங்கிலாந்துக்குச் சென்றிருந்தபோது அங்கே 1846-ல் இறந்தார்.

ரவீந்திரருடைய தமையனார்களாகிய துவிஜேந்திரர், சத்தியேந்திரர், ஜ்யோதிரீந்தர், சகோதரி சுவர்ண குமாரி ஆகியோரும் பலதுறைகளில் சிறந்து விளங்கியவர்கள். ரவீந்திரருடைய தாயார் நோயாளி. அதனால் வேலைக்காரர் வீட்டை விட்டு வெளியே போகாமல் ரவீந்திரரை அடக்கிப் பாதுகாத்து வந்தனர். அதனால் இவருக்கு வெளியே போய் இயற்கையை அனுபவிக்க அதிக ஆசை எழுந்தது. -

ரவீந்திரர் 11ஆம் வயதில் பூணுரல் போடப் பெற்றார். இவரைத் தந்தையார் இமயமலைச் சாரலுக்கு அழைத்துச்