பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

செந்தமிழ் பெட்டகம்


இச்சமயம் ரவீந்திரர் தம் குழந்தை சமீந்திரனுக்கு ஆறுதலுண்டாக்கவும் மகிழ்விக்கவும் வேண்டி 'சிசு’ என்ற பெயரால் குழந்தைக் கவிதைகள் புனைந்தார். அவை பின்னால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பெற்றுப் பிறைத்திங்கள் என்ற பெயரால் வெளியாயின.

இவர் 1905-ல் கர்சன் பிரபு வங்காளத்தைப் பிரித்ததை எதிர்த்து எழுந்த சுதேசி இயக்கத்தில் சேர்ந்தார். இவருடைய பாடல்கள் வங்காளம் முழுவதிலும் பாடப்பெற்றன. ரவீந்திரர் தேச நிருமாண வேலையில் ஈடுபடும்படி மக்களைத் துண்டினார்.

இப்போது உலகப் புகழ்பெற்றுள்ள இருளறையின் ராஜா, அஞ்சலகம் என்ற நாடகங்களும், கீதாஞ்சலி என்ற பாடல்களும் 1910 - 1911-ல் இயற்றப்பெற்றன.

1911 டிசம்பரில் கல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதல் பாடப்பெற்ற ஜனகணமன என்னும் பாடலே சுதந்திர இந்தியாவின் நாட்டுப் பாடலாக 1950-ல் ஆக்கப் பெற்றுள்ளது. இந்த வங்காளிப் பாடலை ரவீந்திரர் 1919-ல் இந்தியாவின் காலைப்பாடல் என்ற பெயரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

ரவீந்திரர் தம் சாந்திநிகேதனப் பள்ளியின் குறிக்கோள்களை மேனாட்டில் விளக்கிச் சொல்ல விரும்பி 1912 மேத் திங்களில் இங்கிலாந்து சென்றார். அப்போது அங்குத் தலைசிறந்த ஒவியர் ரோதன்ஸ்ட்டைன், தலைசிறந்த கவிஞர் யேட்ஸ், தலைசிறந்த மதிப்புரை அறிஞர் பிராட்லி என்போர் இவருடைய கீதாஞ்சலிப் பாடல்களை வியந்தனர்.

இங்கிலாந்தில் இவருடைய சிறந்த நூல்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் வெளியாயின. ரவீந்திரர் அமெரிக்கா சென்று சொற்பொழிவுகள் செய்துவிட்டு 1913 ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு வந்து அக்டோபரில்