உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

235


நாடகம். டாக கர், சந்நியாசி, பால்குன, சக்தகரபி, ராஜா, தபதி முக்ததாரா முதலியவை ஆழ்ந்த ஆன்மிகக் கருத்துக் கொண்டவை. -

கட்டுரைத் தொகுதிகளில் தொடக்கத்தில் எழுதிய வ்யங்க கெளதுக, ஹாஸ்ய கெளதுக போன்ற நகைச்சுவைச் சித்திரங்களும், ஸ்வதேச, மானுஷதர்ம (மனித தருமம்), பிராசீன ஸாஹித்ய (பழைய இலக்கியம்), ஸாதனா, ஆதுனிக ஸாஹித்ய (தற்கால இலக்கியம்) முதலியவையும் குறிப்பிட வேண்டியவை.

கடிதத் தொகுப்புகளில் ஜாவா யாத்ரி (ஜாவாப் பிரயாணி), ஜாபான் யாத்ரி (ஜப்பான் பிரயாணி), சின்னபத்ர, சி.டி.பத்ர (பல்வகைக் கடிதங்கள்) முதலியவை ரசமான பல விவரங்கள் அடங்கியவை.

சுயசரிதையில் ஜீவன ஸ்மிருதி (வாழ்வின் நினைவுகள்), சேலே வேலா (இளமைப் பருவம்) இவை இரண்டும் சிறந்தவை.

ரவீந்திரருடைய நூல்களில் பெரும்பான்மையானவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பெற்றிருக்கின்றன. ஓரளவுக்குப் பிற மொழிகளிலும் வெளியாகியிருக்கின்றன.

!