பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கவிஞராக, எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக, ஆராய்ச்சிக் கட்டுரையாளராக, தமிழிலக்கிய தகவல் களஞ்சியமாக, பதிப்பாளராகத் தடம் பதித்த புலவர் கோவேந்தன் பல்வேறு தமிழிலக்கிய அமைப்புகளில் படைப்புகளைத் தந்து, தமிழிலக்கிய ஆய்வு மாணவர்களின் நெறியாளராக இருந்து தமிழ்ப் பணியாற்றியவர்.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் பொறுப்பாளராகப் பொறுப்பேற்று வைணவ இலக்கிய நூல்கள் பதிப்பிலும் தம் சொந்த பதிப்பகத்தின் மூலம் கவிதை, ஆய்வு கட்டுரைகள், சிறுவர் இலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள், மேலை கீழை நாட்டு இலக்கியங்கள், வரலாற்று நூல்கள், பழந்தமிழ் இலக்கிய நூல்களை வெளியிட்டும் தமிழ் உலகுக்கு பெருமை சேர்த்தவர்.
- எழில்