பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

செந்தமிழ் பெட்டகம்


சன்மார்க்கம் உருவாகிறது. கலாந்தம், யோகாந்தம், போதாந்தம், நாதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம், என்ற ஆறு அந்தங்களிலும் விளங்கும் மெய்ப்பொருள் ஒன்றேயென்பதை, “ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே, அதுவது வாயொளிர் பொதுவுறு நிதியே” என்று வள்ளலார் எடுத்துக் காட்டுகிறார் மெய்ப்பொருள் பற்றிய பொது நன்னெறியே சமரச சன்மார்க்கம் என்பதாகும். இப்பொது நன்னெறியே பகைமை, பிணக்கு, பூசல், போர் ஆகியவற்றை ஒழித்து மக்களை ஒன்றுபட்டு வாழச்செய்யும் என்பது இவர் துணிபு.

சமரச நெறியைச் சாராதவர், அருட்பெருஞ் சோதியரே எவ்வெவர்க்கும் இறைவரென்பதறியாததால் யானை கண்ட குருடரை ஒத்தவராகின்றனர் என்று வள்ளலார் கூறுகிறார். வள்ளலார் போற்றும் பொது நெறி தொன்றுதோட்டே தமிழ்நாட்டில் பயின்று வருவதொன்றாகும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “ஒன்றே குலம் ஒருவனே தேவனும்” என்றனர் பண்டைக்காலச் சான்றோர். பிற்காலச் சான்றோராகிய தாயுமானவர் சமரச நன்நிலை பற்றிப் பாடினார். இவ்வாறு பண்டைக்காலத்திலிருந்தே நிலவிவந்த பொது நன்னெறி மரபு புத்துயிருடனும் புதுமெருகுடனும் திருவருட்பாவில் சிறந்து விளங்குகிறது.

அருட்பெருஞ்சோதியாக இறைவனைக் கண்டதால் வள்ளலார் மக்களையும் அவன் சாயையாகவே காண்கிறார். “வள்ளல் உன்றனையே மதித்து உன் சாயையாப் பிறரைப் பாத்ததேயல்லால், தலைவ வேறு எண்ணிய துண்டோ? என்பது இவர் எண்ணம்.

இறைவன் எங்கே உளன்? அவன் செயல் யாது? வள்ளலாரின் விடை வருமாறு : எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போ லெண்ணி யுள்ளே, ஒத்துரிமை யுடையவராயிருப்பவர் உள்ளமே இறைவன் நடம்புரியும் இடம் “ உயிரெலா மொருநீ திருநடம்