பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்


காப்பியங்கள்




மகா காவியம் :

மஸ்கிருதத்தில் செய்யுள் நடையிலுள்ள காவியங்களுள் மகாகாவியம் என்பது ஒருவகை. இதன் இலக்கணம் வருமாறு : புராணங்களிலோ இதிகாசங்களிலோ பிரசித்தமான கதையாயிருக்க வேண்டும். தலைவன் தீரோதாத்தன் என்ற வகுப்பைச் சேர்ந்தவனாயிருத்தல் வேண்டும். நகரம், கடல், மலை, இருது, சூரிய சந்திரர்களின் தோற்றம், மறைவு, பொழிலிலும் புனலிலும் விளையாட்டு, மதுபானம், காதல், பிரிவு, திருமணம், மக்கட்பேறு, சபை கூட்டலும் மந்திராலோசனையும், சண்டை, இறுதியில் தலைவன் வெற்றி, இவை எல்லாமோ, பெரும்பாலுமோ வருணிக்கப் பெற்றிருத்தல் வேண்டும். மிகவும் சுருக்கமாயிருத்தல் கூடாது, சுவைகளும் மெய்ப்பாடுகளும் வருணிக்கப் பெற்றிருத்தல் வேண்டும். மிகவும் சுருக்கமாயிருத்தல் கூடாது. சுவைகளும் மெய்ப்பாடுகளும் நிறைந்திருக்க வேண்டும். நாடகத்திலுள்ள பஞ்ச சந்திகள் இங்கும் அமைந்திருக்க வேண்டும். நூல் சருக்கங்களாகப் பிரிக்கப் பெற்றுச் சருக்க முடிவிலும் அடுத்தடுத்த சருக்கங்களிலும் விருத்த மாற்றம் இருக்க வேண்டும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் நூற்பயனாய் அமையவேண்டும். இவ் விலக்கணம் அமையப்பெறாத செய்யுள் நூல் கண்ட காவியமெனப் பெயர் பெறும்.