புலவர் த. கோவேந்தன்
37
களுடன் போரிட்டு வெற்றி கொள்ளுகின்றான். எட்டில் இந்துமதியின் இறப்பும், அஜன் புலம்பலும், மரணமும் வருகின்றன. ஒன்பதில் தசரதன் அரசாட்சியும், வசந்த இருது, வேட்டை இவற்றின் வருணனையும், தசரதனுக்கு ஏற்பட்ட சாபமும் வருகின்றன. பத்தாம் சருக்கத்தில் தேவர்கள் இராவணனிடமிருந்து தம்மை இரட்சிக்குமாறு விஷ்ணுவைத் துதித்து வேண்ட, விஷ்ணு இராமன் முதலிய நால்வராகப் பிறக்கின்றார். பதினொன்றில் இராமர் விசுவாமித்திரரின் யாகத்தைக் காத்துச் சீதையை மணந்து, பரசுராமரை வெல்லுகின்றார்.
பன்னிரண்டில் இராமர் கானகம் செல்வது முதல் இராவண வதை ஈறாகவுள்ள கதை கூறப் பெறுகிறது. பதின்மூன்றில் இராமர் அயோத்திக்குத் திரும்புவதும், சமுத்திர வருணனையும், முடிசூட்டு விழாவும் வருகின்றன. பதினான்கில் இராமர் சீதையைத் தியாகம் செய்து காட்டுக்கனுப்பிய கதை வருகிறது. பதினைந்தில் இலவ குசர் பிறப்பும், இராமர் அசுவமேதம் செய்ததும், தம்பிமாரோடும் அயோத்தி நகரமாந்தரோடும் வைகுண்டம் சேர்ந்ததும் வருணிக்கப்பெறுகின்றன. பதினாறு முதல் பத்தொன்பது ஈறாகவுள்ள சருக்கங்களில் அக்கினி வருணன் முடியவுள்ள இராமருடைய சந்ததியாரின் கதை கூறப்பெறுகிறது.
இரகுவமிசத்தில் வீரரசம் பிரதானம். பத்து முதல் பதினைந்து முடியவுள்ள சருக்கங்களில், இராமாயணக் கதையை மிக்க அழகாகச் சுருக்குவதில் காளிதாசர் திறமை காணப்பெறுகிறது. காளிதாசரின் கவித் திறமை முதிர்ந்த நிலையில் இக்காவியமும் எழுதப் பெற்றது என்பர்.
குமாரசம்பவம் :
இம் மகாகாவியம் காளிதாசரால் இயற்றப் பெற்றது. இதில் பதினேழு சருக்கங்கள் உள. குமாரக்கடவுளின் உள்பத்தியும், அவர் தாரகன் என்ற அசரனை வென்று