பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

41


சருக்கங்கள் உள்ளன. முதல் சருக்கத்தில் இந்திரனால் அனுப்பப் பெற்ற நாரதர் கிருஷ்ணனுக்குச் சிசுபாலன் கொல்லப்பட வேண்டியதை வலியுறுத்துகிறார். இரண்டாம் சருக்கத்தில் பலராமன், உத்தவர், கிருஷ்ணன், மூவரும் மந்திராலோசனை செய்கின்றனர். பலராமன் உடனே படையெடுக்க வேண்டுமென்று கூறக் கிருஷ்ணன் யுதிஷ்டிரர் செய்யும் இராஜசூயயாகத்திற்குச் சென்றால். அங்குத் தருணம் வாய்க்கும் என்கிறார். மூன்றாம் சருக்கத்தில் கிருஷ்ணன் யாகத்திற்குப் புறப்படுகிறார். இங்கே துவாரகையும் சமுத்திரமும் வருணிக்கப் பெறுகின்றன. நான்கில் எல்லோரும் இரைவதமலை சேர்கின்றனர். இங்கு மலை வருணனை வருகிறது. ஐந்தில் மலையில் கிருஷ்ணன் சைனியம் வருணிக்கப் பெறுகிறது. ஆறில் இருதுக்களும், ஏழில் பூப்பறித்தலும், எட்டில் நீர் விளையாட்டும் வருணிக்கப் பெறுகின்றன.

ஒன்பதில் சூரியாஸ்தமனமும், சந்தியா காலமும், சந்திரோதயமும், அலங்கரித்துக் கொள்வதும், காதலர் தூது அனுப்புவதும், காதல் விளையாட்டும் வருகின்றன. பத்தில் மதுபானமும், பதினொன்றில் காலை வேளையும் வருணிக்கப் பெறுகின்றன.

பன்னிரண்டில் கிருஷ்ணன் இரைவதமலையிலிருந்து இந்திரப்பிரஸ்தம் சேர்கிறார். வழியில் யமுனையைக் கடக்கும் போது யமுனை வருணிக்கப் பெறுகிறது. பதின்மூன்றில் கிருஷ்ணனைப் பாண்டவர் வரவேற்பதும், பட்டணத்துப் பெண்கள் கிருஷ்ணன் வருகையை உவகையுடன் பார்ப்பதும், தருமனவையும் வருணிக்கப் பெறுகின்றன. பதினான்கில் இராசசூயம் தொடங்குகின்றது. தருமர் கிருஷ்ணனைப் பூசிக்கின்றார். பீஷ்மர் கிருஷ்ணனைத் துதிக்கின்றார். பதினைந்தில் சிசுபாலனும் அவனைச் சேர்ந்த அரசர்களும் கிருஷ்ணன் பூசிக்கப்பெற்றதைப் பார்த்துக் கோபிக்கின்றனர். சேனையை யுத்தத்திற்காகத் தயார் செய்கின்