பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

செந்தமிழ் பெட்டகம்


றனர். பதினாறில் சிசுபாலன் தூதன்மூலம் கிருஷ்ணனைப் போருக்கழைக்கின்றான். தூதனுக்கும் சாத்தகிக்கும் சம்பாஷணை நடக்கின்றது. பதினேழில் கிருஷ்ணன் தம் சேனையைத் தயார் செய்து கொண்டு சண்டைக்குப் புறப்படுகிறார். பதினெட்டிலும் பத்தொன்பதிலும் இரு படைகளுக்கும் போர் நடக்கின்றது. இரு பதில் சிசுபாலனும் கிருஷ்ணனும் படைதாங்கிப் போர் செய்வதும், சிசு பாலன் வதமும் வருகின்றன.

கடைசியில் கவிதம் வமிசத்தை வருணிக்கின்றார். இதில் காளிதாச காவியங்களிலுள்ள உவமையழகும், பாரவியின் காவியத்திலுள்ள பொருட்செறிவும், தண்டியின் சொல்லழகும் ஒருங்கே காணப்பெறும் என்பது கவிஞர் கருத்து. கவி பல சாத்திரங்களைக் கற்றவராதலின், ஆங்காங்கு வரும் பொருள்களை அவர் இதில் புகுத்தியிருப்பது வாசிப்போருக்கு மிகுந்த இன்பத்தைத் தரும்.

நைஷதிய சரிதம் :

இது 12-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ ஹர்ஷர் என்ற மகாகவியால் இயற்றப்பெற்றது. இதில் நளன் தமயந்தி இருவர்களின் கதை கூறப்பெறுகிறது. இக் காவியத்தில் தற்போது கிடைக்கும் இருபத்திரண்டு சருக்கங்கள் நள தமயந்தியின் திருமணத்தோடு முடிந்து விடுவதால், இக்காவியம் அறுபது சருக்கங்கள் கொண்ட தாயிருந்தது என்பர் சிலர். முதல் சருக்கத்தில் நள தமயந்தியர்களின் காதல் வருணிக்கப் பெறுகிறது. இரண்டாம் சருக்கத்தில் அன்னம் நளனுக்காகத் தமயந்தியிடம் தூது போகின்றது. இங்குக் குண்டினபுரம் வருணிக்கப்பெறுகிறது. மூன்றில் அன்னம் தமயந்தியிடம் நளனுடைய காதலைக் கூறு கிறது. தமயந்தியும் தன் சம்மதத்தைத் தெரிவித்து, அன்னத்தை நளனிடம் அனுப்புகிறாள்.

நான்கில் தமயந்தியின் ஆற்றாமை வருணிக்கப் பெறுகிறது. இதையறிந்த பீமராஜன் சுயம்வரத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கின்றான். ஐந்தில் இந்தி