பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

43


ரன் முதலிய தேவர்கள் நளனையே தமயந்தியிடம் தம் தூதனாக அனுப்புகின்றனர். ஆறில் நளன் தமயந்தியின் அந்தப்புரம் சேர்கின்றான். ஏழில் தமயந்தியும் நளனும் ஒருவரை ஒருவர் பார்த்து வியக்கின்றனர். எட்டில் நளன் தேவர்களின் வேண்டுகோளைத் தெரிவித்து, ஒன்பதில் தமயந்தியைத் தேவர்களில் ஒருவரை மணக்குமாறு கேட்கின்றான்.

தமயந்தியின் உறுதியைக் கண்டு தான் நளன் என்பதைக் கூறி அவளைத் தேற்றுகின்றான். பத்தில் அரசர்களும் இந்திரன் முதலிய தேவர்களும் சுயம்வரத்திற்குச் செல்லுகின்றனர். பதினொன்றிலும் பன்னிரண்டிலும் சரஸ்வதியே தோழியின் தானத்தில் இருந்து தமயந்திக்கு அரசர்களை அறிமுகம் செய்விக்கின்றாள். பதின்மூன்றில் ஐந்து நளன்களைப் பார்த்துத் தமயந்தி மயங்கி நிற்கிறாள். பதினான்கில் தமயந்தி நளன் உருவில் வந்த இந்திரன் முதலிய தேவர்களையே துதித்து நிற்க, அவர்களே உண்மை நளனைக் காட்டுகின்றனர். தமயந்தி நளனுக்கு மாலையிடத் தேவர்கள் வரங்கொடுத்து மறைகின்றனர். பதினைந்தில் தமயந்தியும் நளனும் திருமணத்திற்காக அலங்கரிக்கப் பெறுகின்றனர்.

பதினோறில் நளன் தமயந்தியை மணந்து சின்னாட்களுக்கப் பின் தமயந்தியுடன் தன் தேசம் சேர்கின்றான். பதினேழில் கலியானவன் தம்பதிகளைப் பிரித்து விடுவதாகச் சபதம் கூறி, நளன் உத்தியானத்திலுள்ள தான்றி மரத்தை அடைகின்றான். பதினெட்டில் நளனும் தமயந்தியும் மண வாழ்க்கையின் இன்பத்தை நுகர்கின்றனர். பத்தொன்பதில் சூரிய உதயமும் காலையும் வருணிக்கப் பெறுகின்றன. இருபதில் ஊடலும் விளையாட்டும் வருகின்றன. இருபத்தொன்றில் நளன் செய்யும் விஷ்ணுவின் பூசை வருணிக்கப்பெறுகிறது. இருபத்திரண்டில் தமயந்தி சாயங்காலத்தில் சந்திரனை அழகாக வருணிப்பதும், அதைக் கேட்டு நளன் வியப்பதும் வருகின்றன. இதனுடன் இக்காவியம் முடிவுபெறுகிறது.