46
செந்தமிழ் பெட்டகம்
மாணவர் இம்மூவராலும் அக்பரது காலம் வரையில் காச்மீர வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.
ஜல்ஹணருடைய சோமபால விலாசம், ஹேமசந்திரர் எழுதிய குமாரபால சரிதம், ஜோனராஜரது பிருதிவிராஜ விஜயம் முதலியவைகளும் வரலாற்றுக் காப்பியங்களே. 18 ஆம் நூற்றாண்டில் ஜயபுரத்தை ஆண்ட சேவாய் ஜயசிம்மனது பெருமையை ஜெயவமிச காப்பியம் கூறுகிறது. கூர்ஜர நாட்டு வரலாற்றைக் கூறும் அரிசிம்மனது சுகிர்தசங்கீர்த்தனம், ஜைனர் நயசந்திரர் எழுதிய ரணஸ்தம்பபுர வரலாறான ஹம்மீர காப்பியம், வங்க நாட்டுச் சேன வமசத்தரசர்களது சரித்திரமான இரத்தினசேன குலப்பிரசஸ்தி, வாசுதேவ ரதஸோமயாஜியினது கங்கவமிசானு சரிதம் என்னும் ஒரிஸ்ஸா நாட்டு வரலாறு, ஜயந்திரபுரத்தைச்சேர்ந்த கடம்ப வமிசத்தினது வரலாறான மயூர வமிச, சரிதம், ஜாம வமிச வரலாறான ஜாமவிஜய காப்பியம், லாலமணித்ரி பாடியினது வாகேல வமிசாவளி முதலிய பல வரலாற் றுக் காப்பியங்கள் உள்ளன.
கல்வெட்டுக்கள் வரலாற்றுக் காப்பியங்கள் முதலியவை கொண்டு விஜயநகர வரலாற்றைக் குறித்து அறிய முடிகின்றது. 14ஆம் நூற்றாண்டில் அந்நகரை ஆண்ட கம்பராயனது மனைவி தான் இயற்றிய மதுரா விஜயம் என்னும் காவியத்தில் அவ்வரசனுடைய வீரச் செயல்களை வருணிக்கிறாள்; இது தென்னிந்திய வரலாற்றா ராச்சிக்கு உதவும் நூல். இரண்டாம் ராஜநாதர் எழுதிய சாலுவாப்யுதயம் என்னும் காப்பியம், கி. பி. 15ஆம் நூற் றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட சாளுவ நரசிம்மனுடைய முன்னோர்கள், அவ்வரசன் இவர்களது வரலாற்றை ஒட்டியது. கி. பி. 1530-ல் அரசனாக இருந்த அச்சுதராயனது தென்னிந்தியப் படையெடுப்பை வர்ணிக்கிறது, மூன்றாம் ராஜநாதரது அச்சுதராயர்ப் யுதயம் என்னும் காப்பியம்.