பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

செந்தமிழ் பெட்டகம்


இக்காலத்தில் ஆங்கில சாம்ராச்சியத்தைக் கூறும் சில சமஸ்கிருத நூல்களும், பின் தேசிய இயக்கம் கிளம்பிய பிறகு சுயராச்சியப் போரையும் காந்தியடிகளின் வரலாற்றையும் கூறும் நூல்களும் எழுந்துள்ளன.

பிற மகா காவியங்கள் :

காளிதாசருக்கு முன்னும் சில மகா கவிகளிருந்தனர். அவருக்குப் பின் எண்ணற்ற கவிகள் தோன்றினர். மகா கவிகளுள் எல்லாச் சமயத்தினரும் உண்டு. அசுவகோஷனெனும் பெளத்த கவி புத்த சரிதம், செளந்தரநந்தம் ஆகிய அழகிய இரு காவியங்கள் இயற்றியுள்ளார். இவருடைய சொல் நயம் காளிதாரசது போன்றது. புத்தகோஷரெனும் பெளத்தரும் பக்திய சூடாமணி எனும் காவியத்தில் புத்தரின் வரலாற்றை எழுதியுள்ளார். பட்டாரஹரிசந்திரரெனும் ஜைனகவியினது (கி.பி. 5ஆம் நூ) தரும சருமாப்யுதயம் எனும் மகாகாவியத்தில் ஜைன குரு ஒருவரின் வரலாறுளது. இவர் பாணகவியாலும் போற்றப்பட்டவர். இங்ஙனமே ஜினசேனரெனும் ஜன கவி பார்சுவாப்யுதயம் எனும் காவியத்தில் காளிதாசரின் மேகசந்தேசத்திலுள்ள கடைசி அடிகளை மட்டும் வைத்துக் கொண்டு சமஸ்யாபூரணம் செய்திருக்கிறார். குமாரதாசரெனும் அரசர் (6ஆம் நூ.) ஜாநகீஹரணமெனும் காவியத்தில் இராமாயணக் கதையை இனிய முறையில் பாடியுள்ளார். மேண்டனெனும் கவி ஹயக்கிரீவ வதமென்ற அழகிய மகா காவியத்தை எழுதியுள்ளார்.

பட்டி எனும் கவி எழுதிய பட்டிகாப்பியம் ஒரு தனிச் சிறப்புப் பெற்றது (7ஆம் நூ). காப்பியத்துக்குரிய எல்லா அமைப்புக களுடனும் இலக்கணத்திற்கு உதாரணங்களுடனும் கூடிய காவியம் இது. இம் முறையைப் பின்பற்றி பெளமகனென்பார் (7ஆம் நூ). ராவணர் ஜுநீயம் எனும் காப்பியத்தை இயற்றினார். ரத்னாகர