புலவர் த. கோவேந்தன்
49
னெனும் கவி (9ஆம்நூ.) ஹரவிஜயம் எனும் காவியத்தைச் செய்தார். இதில் உத்பிரேட்சாலங்காரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அபிநந்தர் (9ஆம் நூ) காதம்பரி கதாசாரமெனும் காப்பியத்தில் பாணரது காதம்பரியின் சுருக்கத்தைக் கூறினார். மற்றோர் அபிநந்தர் இராம சரிதத்தை இயற்றியவர். க்ஷேமேந்திரரெனும் சிறந்த கவி காச்மீர தேசத்தவர் (11ஆம் நூ.) அவருடைய நூல்களுள் மகாபாரத மஞ்சரி, இராமாயண மஞ்சரி, பிருஹத்கதா மஞ்சரி இம்மூன்றும் நீண்டவை. மங்கனெனும் கவியும் (12ஆம் நூ.) காச்மீர தேசத்தவரே. இவருடைய ஸ்ரீகண்ட சரிதத்தில் சிவன் புரமெரித்த கதை வருணிக்கப் பெறுகிறது. தனஞ்சயரெனும் கவி ராகவபாண்டவீயம் எனும் காவியத்தில் ஒரே சமயத்தில் இராமகதையையும் பாண்டவ'கதையையும் அமைத்துள்ளார். இதைப் போன்றதே கவிராஜனின் ராகவபாண்ட வீயம் வேங்கட நாதரின் (13ஆம் நூ.) யாதவாப்யுதயமும் நீலகண்ட தீட்சிதரின் சிவலீலார்ணவமும், ராமபத்திர தீக்ஷிவிதரின் பதஞ்சலி சரிதமும் பிற்காலத்தியவற்றுள் சிறந்தவை.
மகாபலி :
இவன் ஒர் அசுரன். பிரகலாதனுக்குப் பேரன். விரோசனன் என்பவனுக்கும் தேவி என்பவளுக்கும் பிறந்தவன். இவன் தவத்தின் சிறப்பால் மூவுலகங்களுக்கும் அசரனானான். அசுரர்களுக்குப் பகைவர்களான தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கிய திரு மால் காசிப முனிவரிடம் வாமன வடிவுடன் பிறந்து, மகாபலி வேள்வி செய்யும் போது சென்று மூன்றடி மண் தானங் கேட்டார். அசுர குருவாகிய சுக்கிராச்சாரி திருமாலின் நோக்கத்தை யுணர்ந்து, மகாபலியிடம் தானங் கொடுக்க வேண்டாமென அறிவுரை கூறினார். மகாபலி அவருரை கேளாமல் வாமனர் விரும்பியவாறே மூன்றடி மண் தானங் கொடுத்தான். உடனே வாமனர் தம் குள்ள வுருவத்தை விடுத்துத் திரிவிக்கிரமனாக நீண்டு நிலவு
செ. பெ.-ll-4