உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

53


நாடகசாலை வேண்டும். நாடக சாலையைப் பொறுத்தது நாடகத்தினியல்பும் என்று கூறலாம். உதாரணமாகக் கிரேக்கர் ஆடுகின்ற அரங்கு மிகப் பெரிது. இருபதினாயிரம் பேர் கூடியிருப்பார்கள். நடிகர்களின் நுட்ப பெய்ப்பாடுகளை இவர்கள் நுகர முடியாது. நடிகர்கள் உரத்துக் கூவவேண்டும். பல சுவைகளைக் காட்ட முடியாது. ஏதாவது ஒரு சுவையைக் குறிக்கக்கூடிய முக மூடியை அணிந்துகொள்வார்கள். அவர்கள் பேச்சு உரத்துக் கூவப்படும் ஒரு சொற்பொழிவாக இருக்கும். ஷேக்ஸ்பியர் இருந்த காலத்தில் காட்சித் திரைகள் இல்லை. அக்காரணம் பற்றியே சொற் சித்திரங்கள் ஷேக்ஸிபியரிடம் மலிந்து கிடக்கின்றன.

கிரேக்க நாடகங்களில் மனிதனுக்கும் தெய்வத்திற்கும் நிகழக்கூடிய போராட்டம் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. எஸ்கிலஸ் இத்தகைய போராட்டத்தை அமைத்திருக்கிறார். இவர் புராணக் கதைகளையே நாடகங்களாக்கியிருக்கிறார். சாபக்கிளிஸ் பழங்கதைகளைத் தமக்குப் பொருளாகக் கொண்டாலும், மனிதர்களுக்குள்ளே நிகழும் போராட்டத்தைச் சித்திரிக்கிறார். யூரிப்பிடீஸ் எழுதிய நாடகங்களில் நவீனத் தன்மை தோன்றுகின்றது.

எல்லா நாடகங்களிலும் போராட்டத்தைத் பார்க்கின்றோம். கதையில் ஓர் ஓட்டம் வேண்டும். போராட்டமில்லாத நாடகமில்லை. சொற்சிக்கனத்தால் நாடகம் பொலிவுறும். கதை அமைப்பும், பாத்திர சிருஷ்டியும் பின்னிக் கிடக்க வேண்டும். அரிஸ்டாட்டில் துன்பியல் நாடகத்தையே போற்றுகின்றார். குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாளிலேயே அது முடிவடைய வேண்டும். ஒரே நிகழ்ச்சியைச் சித்திரிக்க வேண்டும். ஒரே இடத்தில் நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும்.

இந்நெறிகளையெல்லாம் ஷேக்ஸ்பியர் தகர்த் தெறிந்து விட்டார். ஒரே நிகழ்ச்சி வேண்டுமாயினும் இதைக் கவின் பெறச் செய்யும் பல கிளை நிகழ்ச்சிகளுக்கும் நாடகத்தில் இடமிருக்க வேண்டும். வாழ்க்கை