பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

செந்தமிழ் பெட்டகம்


தோன்றின. நகைச்சுவை நிரம்பிய பிரகசன நாடகங்களுமுண்டு. ஆனால், புராணக் கதைகள் பொதிந்த நாடகங்களே முற்காலத்தில் இந்தியர் உள்ளங்களைக் கவர்ந்தன. இடைக்காலத்தில் 12 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணமிசிரர் பிரதோத சந்திரோதயம் என்ற அத்துவைத நாடகத்தை வெளியிட்டார். இந்நூலில் அருவ குணங்களெல்லாம் பாத்திரங்களாகக் காட்சி அளிக்கின்றன. ஆங்கில நாட்டுப் பன்யன் தெய்வ யாத்திரையை இந்நூல் நினைவூட்டும். இவருக்குப்பின் வந்த வேதாந்த தேசிகர் சங்கல்ப சூரியோதயம் என்ற நாடகத்தை எழுதினார். அத்துவைதமத கண்டனமாக இந் நூல் திகழ்கின்றது. மதப்பிரசார நூல்கள்தாம் இடைக் காலத்தில் தோன்றின. -

சென்ற நூற்றாண்டில் நவீன நாடகங்களிலும் புராணக் கதைகளின் மணம் முற்றிலும் போகவில்லை. மேனாட்டு நாடகங்களை மொழி பெயர்க்கத் தொடங்கி இந்திய சுதந்திரத்துனக்கு பின்தான் இப்பொழுதுதான் நாடகங்களில் சமுதாய வாழ்க்கை நுழைய ஆரம்பித்திருக்கின்றது. கிராம முன்னேற்றம், தேசிய உணர்ச்சி இவைகளைக் காட்டக் கூடிய நாடகங்கள் வந்தன. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியத்தில் புதுமையுள்ளது. நாடக ஆசிரியர் சம்பந்த முதலியாரிடம் பழமையும் புதுமையும் கலக்கின்றன. இவருடைய சிறுத் தொண்டர், யயாதி, ஊர்வசியின் சாபம் ஆகிய நாடகங்கள் பழைய புராணங்களில் காணப்பட்ட பொருள்களைக் கொண்டு சமைக்கப்பட்டன. இவருடைய ‘சபாபதி' தமிழ்ப் பிரகசனமாகும். தமிழ் மலர்ச்சியில் நாடகத்திற்கு ஓரிடம் உண்டென்று வழி காட்டிய பெருமை இவரைச் சார்ந்தது.

சீன நாட்டிலும் இந்தியாவில் தோன்றினாற் போலவே கூத்திலிருந்தும் பாட்டிலிருந்தும் நாடகம் பிறந்திருக்கிறது. பொம்மலாட்டமும் உண்டு. பண்டைக் கால நாடகம், இடைக்கால நாடகம், இக்கால நாடகம்