புலவர் த. கோவேந்தன்
57
என்று அதன் வரலாற்றைப் பிரிக்கலாம். பொருளுக்குத் தக்கவாறு பன்னிரண்டு விதங்களாகச் சீனர் வகுக்கின்றனர். வரலாற்று நாடகத்தை அவர்கள் அறியாமல் இல்லை. சமுதாயத்தில் காணப்படுகின்ற நன்மை, தீமைகளையெல்லாம் அச்சமின்றி அவர் களுடைய நாடகங்கள் சித்திரிக்கின்றன. அவர்கள் நடிப்புத் தொழிலை உயர்வாகக் கருதமாட்டார்கள். இந்தியாவிலும் அண் மைக்காலம் வரை உயர்வாகக் கருதவில்லை. இப் பொழுது நிலை மாறி வருகின்றது.
ஜப்பான் நாட்டில் நாடகத்தைப் பாமர மக்களே பார்த்துக் களித்து வந்தனர். பழைய கதை, பொம்ம லாட்டம் இவைகளின் அமிசங்கள் இவர்கள் நாடகத்தில் தோன்றினாலும், சீன நாடே இவர்களுக்கு வழி காட்டியது எனலாம். பாமரர்கள் சுவைக்கக் கூடிய நாடகங்கள் புராணங்களைப் பற்றிய நாடகங்களே. அவல நாடகங்களும் உண்டு. சமுதாயத்தின் இடை நிலையில் இருக்கிற மக்களும் அறியக் கூடியவைகளும் அவர்களுடைய வாழ்க்கைச் சித்திரங்களைத் தரக் கூடியவைகளுமான நாடகங்களு முண்டு. ஆனால், பொதுவாக அவற்றில் வழங்கப்படுவது நாகரிகமான மொழியன்று.
நாடகத்தைத் தக்க சீர்திருத்தக் கருவியாக ஏற்றுக் கொள்ளலாம். கிரேக்க நாட்டில் நாடகம் சமுதாயத்தைச் சீர்திருக்கக்கூடிய முறையில் அமைந்து கிடந்தது. ரஷ்ய நாட்டில் நாடகம் சமுதாய நலத்திற்கே எழுதப்பட்டு வருகின்றது. ஆனால், இந்நிலையில் கலைஞனின் சொற் சுதந்திரத்திற்கு இடமில்லை. ஆயினும் கலைக்காகவே கலை என்ற எண்ணம் மாறிவருகின்றது. கலைகளெல்லாம் உபதேசத்திற்குத்தான் என்ற கொள்கையை பெர்னாட் ஷா ஆதரித்தார்.
மக்கள் மனத்தில் புதிய உணர்ச்சியை நாடகங்கள் மூலம் எழுப்பக்கூடும் என்பது உண்மை.