பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ஞான மேன்மையையும் வளர்த்து செம் மாந்து நின்று உலகுக்கு வழி காட்டியதை யாராலும் மறக்க முடியாது; மறுக்கவும் கூடாது

இவ்விருமொழிகளும் ஒவ்வொரு காலத்தும் புதுமைத் தன்மையுடன் புதுப் பொலிவு பெற்று வாழ்வியல் இலக்கியங்களை தந்து அரும்பணியாற்றியது.

மனிதன் வெளிப்படுத்திய இவ்விருமொழிகளும் உலக மக்களுக்கு, உலக மொழிகளின் சொற்களின் பயன்பாட்டிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியின் வளர்ச்சி மனிதனின் மேன்மையை வளப்படுத்துவதாக இருக்க வேண்டும் அத்தகைய மொழிவளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும்; இருக்க வேண்டும். ஆயினும், தமிழின் மொழிவளர்ச்சி இத்தகைய வளர்ச்சி, தமிழிக மக்களை மேன்மையுறச் செய்திருக்கிறதா என்றால் அது கேள்விக் குறிதான்.

இந்நூலில் உள்ள ஆய்வுக் கட்டுரைகள் என் தந்தையாரால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப் பட்டவை. தமிழ் மொழியின் நிண்டு (அகராதி) தொடங்கி பாரதி வரை மொழிக்கு ஆற்றிய பங்கினை வெளிச்சமிட்டுக் காட்டும் கட்டுரைகள் அவரது ஆழ்ந்த தமிழறிவினையும், ஆய்வு நோக்கினையும் வெளிபடுத்தியுள்ளன.

தமிழ் - சமஸ்கிருதத்தின் இலக்கியப் படைப்புகள், இலக்கணங்கள், நாடகம், கதைகள், சிறுகதைகள் தோற்றம் வளர்ச்சி