பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

செந்தமிழ் பெட்டகம்


இன்பியல் நாடகம் :

அச்சத்தையும் இரக்கத்தையும் காண்போர் உள்ளங்களில் தூண்டிவிடுவது துன்பியல் நாடகம். அதற்கு நேர்மாறான பயனைக் குறிக்கோளாகக் கொண்டு களிப்பும் நகைச்சுவையும் உள்ளிடாகக் கொண்டு இயங்குவது இன்பியல் நாடகம், துன்பியல் நாடகத்தில் ஒரு வேளை துன்பமும் இடுக்கணம் இடம் பெற்றாலும், அவை மேம்போக்காக இருக்க முடியுமே தவிர, உள்ளத்தே நிலைத்திரா. உள்ளத்தில் ஆழ்ந்த அச்சம், இரக்க மனத்தின் மேம்போக்கான நகை, களிப்பு ஆகிய சுவைகளுக்கே இன்பியலானது நிலைக்களானாக உள்ளது. இன்பியல் நாடகங்கள் பல வகையாயினும் அவற்றின் போக்கு நுட்பமானதாகவோ, வேறு வேடிக் கையானதாகவோ இருந்தாலும், எல்லா இன்பியல் நாட கங்களும் களிப்பைத் தரும் திருமணம் அல்லது பெரு விருந்து போன்ற நிகழ்ச்சியில் நிறைவுறும்.

இன்பியலில் பல வகையான கோட்பாடுகள் உள்ளன. அவற்றுள் எள்ளற் கோட்பாடு என்பதும் ஒன்று; இதனில் இக்கோட்பாட்டின்படி நாடகங்களில் வரும் பாத்திரங்களின் நிலை வாழ்க்கையில் உள்ள நிலையை விட வேண்டுமென்றே மோசமாகவும் இழிவாகவும் இருக்கும். இதனால் பிறக்கின்ற எள்ளற் சுவையிலே நாடகம் காண்போர் சிரித்துக் களிப்பர்.

அடுத்தது ஒழுங்கீனக் கோட்பாடு. இது வாழ்க்கையிலே காணக்கூடியவற்றை மிகைப்படுத்தியோ குறைப்படுத்தியோ காட்டுவது. இந்தக் கோணற் காட்சி சிரிப்பைத் தரும் மகிழ்வூட்டும். மற்றொன்று விடுதலைக் கோட்பாடு. உள்ளத்தில் களிப்பு மிகப் பெருகின்றது. அதனைக் கட்டுப்படுத்தி அடக்க முடியவில்லை. அதனால் மனிதன் சிரிக்கின்றான். அந்தச் சிரிப்பு மிகவும் இயற்கையானது. தானே பிறப்பது. சிரித்தவுடன் மனிதனு டைய உள்ளத்தில் சிறைப்பட்டுக் கிடந்த உணர்ச்சி