பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

61


கோட்பாடுடையனவாக இருந்தன. இக்காலச் சமுதாயத்தில் சமய நிலையங்கள், பல்கலைக் கழகங்கள், பத்தரிகைகள் ஆகியவற்றின் துணிவையும் வேகத்தையும் பார்க்குமிடத்து, அக்கால கிரேக்க நாடகங்கள் ஆற்றி வந்தன. முன்னிணைப்புப் பகுதியில் வரும் ஆய்வுரை, கண்டனம், நையாண்டி ஆகியவற்றின் துணிவையும் வேகத்தையும் பார்க்குமிடத்து, அக்காலக் கிரேக்க வாழ்க்கையில் நாடக ஆசிரியன் பெற்றிருந்த பேச்சுரிமை பெரு வியப்பினை ஊட்டுகின்றது. அந்தப் பகுதியில் கடுமையான சொற்களும் தாட்சணியமற்ற போக்கும் காணப்படுகின்றன.

இந்த முன்னிணைப்புக்குப் பின்னர் சில காட்சிகள் வரும். அவை ஒன்றோடொன்று இயைபற்றுக் காணப்படும். நாடகத்தின் இறுதியில் வேள்வியும் களியாட்ட மும் நிகழும். இதுதான் கிரேக்க இன்பியல் நாடகங்களின் பொதுவான அமைப்பு.

கிரேக்க இன்பியல் நாடகங்களில் ஆரிஸ்டாபனீஸ் எழுதிய வீரர்கள், மேகங்கள், தவளைகள் என்பவையே சிறந்தன. கிடைக்கும் நூல்களும் செய்திகளும் மிக மிகக் குறைவாகவே உள்ளமையால், கிரேக்க இன்பியல் நாடகங்களைப் பற்றி முடிவான கருத்து எதையும் சொல்ல இயலாது.

ஆங்கில இன்பியல் :

இங்கிலாந்தில் நாடகமானது சமயப் பணியின் ஒரு கிளையாகவே தோன்றியது. சமயக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதற்கு நாடகம் ஒரு கருவியாகப் பயன்பட்டது. அந்தக் காலத்தில் மக்கள் இன்பமாகப் பொழுதுபோக்குவதற்கு வேறு எவ்வகையான கேளிக்கைகளும் இருந்ததில்லை. ஆகவே நாடக அரங்குகளில் மக்கள் பெருந்திரளாக கூடினர். அந்த நாடகக் காட்சிகள் யாவும் விவிலிய சமயக் கருத்துகளை விளக்குதற்கென்றே ஆக்கப்பட்டவையாக அமைந்