பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

செந்தமிழ் பெட்டகம்


வால்ப்போன், இரசவாதி, பார்த்தலோமியா சந்தை. இவை மறுமலர்ச்சி இயக்கத்தின் சிறந்த விளைவுகளாகக் கொள்ளப்படுகின்றன.

நடக்கை இன்பியல்

இவர்களுக்குப் பின்னர் இன்பியல் நாடகங்களே மிகுதியாகத் தோன்றின. எதிரிஜ், விச்சர்லி, காங்கிரீவ், வான்பிர முதலான சிறந்த நாடக ஆசிரியர்கள் தோன்றினர்.

எதரிஜ் எழுதிய பழிவாங்கு படலம், அவள் நினைத்தபடி முதலான நாடகங்கள் நாகரிகத்தின் பெயரால் நடைபெற்ற ஒழுக்கக் கேடுகளை எள்ளி நகையாடின. விச்சர்லியின் கானகத்தில் காதல், நடனக் கனவான், நாட்டுப்புற மனைவி முதலான நாடகங்கள் எதரிஜின் நாடகங்களை விடத் தாக்கும் வன்மை மிகுந்தவை.

1688-ல் நடந்த புரட்சிக்குப் பின் பத்து ஆண்டுகள் கழித்து ஜெரிமி காலியர் ஒழுக்கம், சமயம் ஆகியவற்றின் பாதுகாவலராக நாடக அரங்கிலே தோன்றினார். ஆங்கில நாடக அரங்கின் ஒழுக்கக் கேட்டை வெளிப்படையாகத் தாக்கத் தொடங்கினார். கான்கிரீவ் என்பவரின் நாடகங்கள் மிக உயரிய தரமுடையவை. இவர் எழுதிய முதிய பிரமசாரி, இரட்டைப் போக்கன், காதலுக்காக காதல், உலகத்தின் போக்கு முதலான நாடகங்கள் நடக்கை இன்பியலின் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகப் பொலிகின்றன. வான்பிர, பார்க்கவர் ஆகியோரின் நாடகங்கள் களிப்பும் நகைச்சுவையும் மிகுந்தவை. வான்பிரவின் நாடகங்கள் நடக்கைகளின் நுண்ணிய ஆராய்ச்சி உடையன.

மனப்பற்று இன்பியர்

இலக்கியத்தில் மனப்பற்று இடம் பெற்றவுடன் சமுதாயத்தின் நடுத்தர வகுப்பினரின் செல்வாக்கு