பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

67


மிகுதியாக இடம் பெறலாயிற்று. செல்வர்களின் கேளிக்கைகளை உருவாக்கிய நாடகங்கள் மக்களிடையே மதிப்பிழந்தன ஒழுக்கத்துக்கு மதிப்புத் தரும் நாடகங்களை நடுத்தர வகுப்பினர் எதிர்நோக்கினர். இவ்வகையினை முதன் முதல் உருவாக்கியவர் காலிசிபுர் என்பவர். ரிச்சர்ட் எஸ்ட் கோர்ட் எழுதிய நல்ல வழிகாட்டி, ஸ்டீல் எழுதிய பொய் நவிலும் காதலன், இனிய கணவன், அடிசன் எழுதிய பறை முழக்கி முதலிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

ஒழுக்கக்கேடுகளை ஒழிக்கும் மும்முரத்தில் மனப்பற்று இன்பியல் நாடகமானது இன்பியல் என்ற உயிர் நாடியினையே மறந்து விட்டது. இனிய காட்சிகள் இல்லாமல் துன்பியலின் சாயலும் சார்பும் இடம் பெற்றன. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் போன்ற இன்பியல் நாடகங்கள் வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது ஷேக்ஸ்பியரின் நாடகங்களை நடிப்பதில் புகழ் பெற்று விளங்கிய காரிக் என்பவர் தாம் இவ்வெண்ணம் எழுவதற்கு காரணமாக இருந்தார். நாடு எங்கும் ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்கள் நடிக்கப்பட்டன. கோல்டுஸ்மித், ஷெரிடன் ஆகியோரின் இதயங்கள் ஷேக்ஸ்பியர் வசமாயின. மனப்பற்று இன்பியலால் ஏற்பட்ட சூழ்நிலையை மாற்றக்கூடிய இன்பகரமான நாடகங்களை அவர்கள் எழுதி இன்பியல் நாடகத்துக்குப் புதுவழி வகுத்து நாடகக் கலையைக் காப்பாற்றினார்.

இவர்கட்குப் பின்னர் ஒரு நூற்றாண்டுக் காலம் நாடகத் துறை நலிந்திருந்தது. பினியரோ தோன்றி இன்பியல் நாடகக்கலைக்குப் புத்துயிர் ஊட்டினார். தற்கால இன்பியல் நாடகத்தின் நாயகம் என்று குறிக்கத்தக்கவர் நார்வே நாட்டு நாடகாசிரியரான இப்சென் ஆவார். பெர்னார்டு ஷா உட்பட எல்லா நாடக ஆசிரியர்களும் இப்செனுடைய செல்வாக்குக்கு உட்பட்டவராயினர்.