பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

செந்தமிழ் பெட்டகம்


கருத்துரை இன்பியல் :

இருபதாம் நூற்றாண்டு இன்பியல் நாடக வரலாற்றில் சிறந்தவர் ஜார்ஜ் பெர்னார்டு ஷா (1856-1950) ஆவார். அறிவு காட்டும் வழியில் தயவு தாட்சணியமில்லாமல் தீர்ப்புச் சொல்லும் திறனாய்வுத் திறன் அவருடைய தனிச் சிறப்பு. கருத்து வளமும், கொள்கை உரமும், அறிவாராய்ச்சியும், விவாதப் போக்கும் அவருடைய நாடகங்களில் தலை தூக்கி நின்றன. ஷாவின் நாடகங்களில் சிரிப்பும் குத்திக் காட்டும் அறிவும் சிறப்பான உத்திகளாகக் கையாளப்பட்டன. அறிவு கொண்டு தம் கருத்துக்களுக்கு நிலையான வடிவம் கொடுத்ததோடு, மக்களின் உள்ளங்களில் அக்கருத்துக்கள் பதிவதற்குரிய வழி செய்தார்.

துன்பியல் நாடகம் :

இன்பியல், துன்பியல் ஆகிய இரண்டும் நாவல், சிறுகதை போன்றவற்றிலும் காணலாம். ஆயினும், மேலைநாட்டு இலக்கியத்தார் இன்பியல், துன்பியல் ஆகிய பிரிவுகளை நாடக இலக்கியங்களிலேயே அமைத்து வந்திருக்கிறார்கள். நாடக வகைகள் யாவற்றிலும் மிகவும் சிறப்புப் பெறுவது துன்பியல் நாடகம்.

கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் காலம் தொடங்கி இன்று வரை, துன்பியல் என்பதற்குத் தந்துள்ள விளக்கங்கள் பல. அரிஸ்டாட்டில் கூறுவது; துன்பியல் நாடகத்தின் முடிவிலே அச்சத்தை ஊட்டும் வியப்பும் இரக்க உணர்வும் பிறக்க வேண்டும். துன்பியல் நாடகத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் ஒருநாள் எல்லையில் நடைபெறுவனவாக அமைதல் வேண்டும். விதியின் ஆற்றலுக்குமுன் எந்த ஆற்றலும் தோல்வியடைவதாகக் காணவேண்டும்.

ஷோப்பன்ஹார் என்னும் ஜெர்மன் அறிஞர் போன்றவர்கள் துன்பியல் நாடகங்கள் வாழ்க்கையில்