உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

69


வெறுப்பையும் துறவு மனப்பான்மையையும் ஊட்டுகின்றன என்றனர்.

நாவல், சிறுகதை, நாடகங்கள் யாவற்றிலும் போராட்டம் என்ற சிக்கல் இடம் பெறுவதைக் காணலாம் கதைக்கரு சிறப்பாக வளர்ச்சி பெறுவதற்கு ஆசிரியர்கள் கையாளும் உத்திகளில் இந்தப் போராட்டம் என்பது ஒன்று. இந்தப் போராட்டம் ஏனைய இலக்கிய வடிவங்களில் இடம் பெறுதல் இன்றியமையாதது என்று கூற முடியாது. ஆகவே துன்பியல் என்பது போராட்டத்தில் ஏற்படும் துன்பத்தின் வரலாறு என்று துன்பியலின் இலக்கணத்தைக் கூறலாம்.

தோற்றமும் வளர்ச்சியும்

சமயத் துறையே பொதுவாகக் கலைகளும் இலக்கியங்களும் தோன்றுவதற்குக் காரணமாகின்றது என்று கூறுவர். மேலை நாட்டு நாடகவியலின் தோற்றுவாயான கிரேக்க நாடகம் சமயத் தொடர்பான விழாக்களில்தான் முதன்முதலாக அரும்பியது. டையனைசஸ் என்பது ஒரு கிரேக்க நாடகம் சமயத் தொடர்பான விழாக்களில்தான் முதன்முதலாக அரும்பியது. டையனசைஸ் என்பது ஒரு கிரேக்க தேவனின் பெயர். கிரேக்கர்கள் தாவரங்கள், மது வகைகள், காவியம், இசை ஆகியவற்றின் தேவனாக டையனசைஸை வழி பட்டனர். இவனுக்கு ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடைபெறும். அந்த விழாக்களின் போது கிராம மக்கள் ஒன்று திரண்டு அவன் புகழைப் பாடுவர். இப்படித் தேவனைப் போற்றிய நிகழ்ச்சிதான் நாளடைவில் உரையாடலுக்கு இடம் கொடுத்து, நாடகமாக மலர்ந்தது. நாடகப் பாத்திரங்களும் கோரஸ் என்ற பாடக் குழுவினரும் உரையாடுவார்கள். நாடகத் தின் கதை பாட்டாகப் பாடப்படும். கிரேக்க நாடக வரலாற்றின் முதற்பகுதியில் கோரளே முக்கியமானதாக இருந்தது. பின்னர் அறிஞர்கள் படிப்படியே அதன் சிறப்பைக்