பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

செந்தமிழ் பெட்டகம்


நாடகத்தைப் பொறுத்தவரையில் ஷேக்ஸ்பியர் (1564-1616) பன்மடங்கு மார்லோவைவிட உயர்ந்தவர்.

மனித மனத் திட்பத்தின் வலிமைக்கு ஏற்ற செயலை மேற்கொண்டு வெற்றி காண்பதில் வீரமும், மேற்கொள்ளும் முயற்சியில் திட்பம் தோற்குமாறு வீழ்ச்சியடைதலில் துன்பியலும் உள்ளன என்பது மார்லோவின் கருத்து. ஆனால், மனிதன் வீழ்ச்சி அடைவதற்குப் பெரும்பான்மையாக அவனுடைய செயல்களே காரணமாக அமைகின்றன என்பது ஷேக்ஸ்பியரின் கருத்து.

செல்வம், செல்வாக்கு, அதிகாரம் முதலான உயர் தரத்திலுள்ள ஒருவனின் வீழ்ச்சியும், அந்த வீழ்ச்சியின் விளைவான மரணமே ஷேக்ஸ்பியரின் துன்பியலில் நாம் காணும் காட்சிகள். ஐரோப்பிய இடைக்கால துன்பியல் நாடகத் தலைவன் செல்வத்திலும் செழிப்பிலும் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று செத்துப்போக நேரிடும். ஷேக்ஸ்பியரின் துன்பியல் தலைவனிடம் முழுப் பொலிவும் இருக்க முடியாது. ஷேக்ஸ்பியரின் தலைவன் உள்ளத்தைச் சூறையாடும் துன்பத்திலேயே சிக்கித் திணறிச் சாவான்; அத்தகைய சாவு, அந்தத் தலைவனைப் பெரிதும் மதித்துள்ள மக்களின் உள்ளத்தை ஊடுருவித் தைக்கும்.

ஷேக்ஸ்பியர் இயற்றிய துன்பியல் நாடகங்களில் வரும் தலைவன், தன்னுடைய செயல்களின் விளைவாகவே வீழ்ச்சி எய்துகிறான். அந்தச் செயல்களே ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒரு பாத்திரத்தின் செயல்கள் அப்பாத் திரத்தின் வாழ்க்கையைச் சுற்றிப்படர்ந்து சிக்கச் செய்து இறுதி வீழ்ச்சிக்குக் காரணமாகிப் பாத்திரமே தன் தன் வினையின் விதியாகிறது என்பது ஒரளவுக்குத் தான் உண்மையாகும். ஏனெனில் ஒருவனுடைய மன நிலையில் அளவற்ற கோணல் காணலாம், அல்லது இயற் கையை மீறிய அதீத நிகழ்ச்சிகள் உண்டாகலாம்; அல்லது