பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

75


வருகின்றன. உணர்ச்சிகளும் மன எழுச்சிகளும் வெளிப்படுமாறு, உரைநடைப் பகுதியை நடிப்பது போலவே பாடல்களையும் நடிப்பது தான் இசையை நாடகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் முறையென்றும், நாடகத்தில், இறை வழிபாட்டுக்கும் தனிப்பேச்சிற்கும் இடையிடையில் சில மன எழுச்சிகளை வெளிப்படுத்துவதற்கு மட்டுமே இசை பயன்படக்கூடியது என்றும் இப்போது கருதுகின்றனர். இசை நுட்பம் தோன்றுவதற்காக ஒரே கருத்துள்ள வரியைத் திரும்பத் திரும்பப் பாடுவதும், இராகங் களையும் சுரங்களையும் பாடுவதும், நடிகர்களையும் கேட்போரையும் நடிப்பில் கவனம் இழக்கச் செய்யும் இயல்புடையனவாதலால் இவை நாடக இலக்கணத்திற்கு ஒவ்வாதன. நாடகத்தில் இசையை அமைக்க முற்படுவோர், எந்த இடத்தில் இசையை அமைத்தல் பொருத்தமாக இருக்கும் என்பதையும், எந்தவிதமான இசை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்றதாகவும் இயற்கையாகவும் அமையும் என்பதையும் கவனித்தல் இன்றியமையாதது. உரையாடல்கள் இசைப்பாடல் களாக அமைத்தல் இயல்பன்று. ஆகையால் நாடகங்களில் பின்னணி இசை, இடைவேளை இசை என்னும் இவை களைத் தவிர வேறு விதத்தில் இசையானது கலவாமல் இருத்தல் நல்லது. பின்னணி இசை மென்மையாகவும், நடிகன் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளைக் குலைப்பதாயிராமல், அவைகளுக்கு ஏற்றமளிப்பதாயும் அமைய வேண்டும்.

நாடகத்தில் பொருள்களும் சந்தர்ப்பங்களும் :

வாழ்க்கையென்பது இன்பம், துன்பம் முதலான உணர்ச்சிகளின் இடையறாப் போராட்டம், நாடகம் அதைச் சித்திரித்துக் காட்டும்.

நாடகக் கதை இரண்டு பிரிவாகும் : ஒன்று பிரதான சம்பவம்; மற்றொன்று உபகதை. அடிப்படைக் கதையான பிரதான சம்பவத்தின் போக்கை விரிவாக எடுத்துக்காட்ட உதவுவது உபகதை. இவ்விரண்டையும்