பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

செந்தமிழ் பெட்டகம்


மைக்கேல் கடவுள் அருளால் வடக்கே வெகு தூரத்திலே நல்ல சமாதி பெற்றான்; பார்ட்டரிக்கும் நல்ல வெண் பலகையால் செய்த சவப்பெட்டியும் ஆழமான கல்லறையும் நிச்சயமாய்க் கிடைக்கும். இதை விட என்ன வேண்டும் நமக்கு? எவரும் இறவாமல் உயிருடனிருக்க முடியாது; இறக்கத்தானே வேண்டும்; நமக்குக் கிடைத்த வாழ்வில் மனநிறைவு பெறுவதே நம் கடன்' என்று கூறி முழந்தாளிடுகிறாள்; திரை விழுகிறது. இந்தக் கட்டம் மயிர்க்கூச்செறியும் படியாயமைந்திருக்கிறது. ஒரங்க நாடகங்களில் இது ஒரு சிறந்த துன்பியல் நாடகம்.

ஹார்மனின் அம்மையாரே மான்செஸ்ட்டரிலும், லிவர்ப்பூரிலும் அரங்கங்கள் ஏற்படுத்திப் புது நாடகாசிரியர்களை முன்னுக்குக் கொண்டு வந்தார். அவர்களில் ஸ்டான்லி ஹெளட்டன் என்பவருடைய “இறந்த அன்புக்குரியர்' என்னும் நாடகம் நகைச்சுவை மிகுந்தது. இரண்டு பெண்கள் தங்கள் தகப்பனார் இறந்து விட்டதாகக் கேள்வியுற்றுத் தங்கள் கணவர்களுடன் தகப்பனார் வீட்டிற்கு வந்து, அவர் சொத்தையெல்லாம் பங்கு போடுவதில் சண்டை பிடித்துக் கொள்கிறார்கள். அந்த வேளையில் இறந்து போனவரென நினைத்துக் கொண்டிருந்த தகப்பனார் எழுந்திருந்து. “நான் ஷார்ராக்ஸ் என்னும் விதவையை மணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன்; கல்யாணத்திற்கு உங்கள் கணவர்களுடன் வாருங்கள். உங்களுக்கு என் நன்றி 11: ஒருவராலும் நகர்த்த முடியாத இந்த பீரோவை மாடியிலிருந்து கீழே கொண்டவந்த விட்டீர்களே! இங்கிருந்து ஷார்ராக்ஸ் வீட்டிலிருந்து எளிதில் இதைக் கொண்டுபோகலாம்” என்று சொல்லிக் கொண்டு வெளியே போகிறார். இந்நாடகம் இன்பியல் நாடகமாக உலகப் புகழ் அடைந்துள்ளது

ஹார்மனின் அம்மையார் தொடங்கிய இயக்கம் பரவியபின் பல நாடக சங்கங்கள் தோன்றி, ஆண்டு தோறும் நாடக விழாக்கள் ஏற்படுத்திச் சிறந்த ஓரங்க