பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

83

மார்க்கஸ் ஆரிலியஸ் என்னும் சக்கரவர்த்திக்குப்

பின்னர் ரோமப் பேரரசு நலிவுற்றது. அதனுடன் லத்தீன் இலக்கியமும் வளர்ச்சி குன்றியது.

இத்தாலி :

சமயச் சார்பான நாடகங்கள் நாளடைவில் மக்கள் மனத்துக்குச் சலிப்புண்டாக்கின. அச்சமயத்தில் ஐரோப்பிய மறுமலர்ச்சி தோன்றியது. அதன் ஒர் அம்சம் பண்டை கிரேக்க, ரோமானிய நாடகங்களைக் கண்டதாகும். முதலில் கிடைத்த பண்டை நாடகங்கள் பிளாட்டஸ், டெரன்ஸ், செனிக்கா ஆகிய ரோமானியப் புலவர்களுடையவை. இவை முதலில் கிடைத்ததும் இத்தாலி நாட்டிலேயே. ஆதலால் புதிய நாடக இயக்கம் தோன்றியதும் அங்கேயே.

முசாட்டோ என்பவர் 1300-ல் செனிக்காவின் நாடகங்களைப் பின்பற்றிப் பல நாடகங்கள் செய்தார். இவரைப் பின்பற்றியவர்கள் பண்டை நாடகங்கள் மாதிரி நாடகங்கள் எழுதலாயினர். அதனுடன் பண்டை ரோமானிய நாடகங்களை முதலில் அவை எழுதப் பெற்ற லத்தீன் உருவத்திலும், பின்னர் இத்தாலி மொழி உருவத்திலும் நடித்தனர்.

இங்கிலாந்தில் சமய நாடகங்கள் நடிக்கபட்ட காலத்தில் இத்தாலியில் பண்டை ரோமானி நாடகங்களும், அவைகளைப் பின்பற்றி யாத்த நாடகங்களும் பெரு வழக்காயின. செனிக்கா போன்ற நாடகாசிரியரின் நாடகவியற் கொள்கைகள் பரவின. -

இத்தாலியர் துன்பியல் நாடகங்களை முதலில் லத்தீனில் எழுதினர். பின்னர் இத்தாலி மொழியில் செய்யுளாக வரைந்தனர்.

டிரிஸ்னோ என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் கிரேக்க நாடகங்களைத் தழுவி எழுதினார். இவரைப் பின்பற்றிப்