பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

செந்தமிழ் பெட்டகம்


பலர் இயற்றலாயினர். கிரேக்க நாடகங்கள் மொழி பெயர்க்கவும் பெற்றன.

துன்பியல் நாடகங்களைவிட இன்பியல் நாடகங்களே செழித்து வளர்ந்தன அரச சபை பொழுது போக்கை மிகுதியாக விரும்பியதே இதற்குக் காரணம். இன்பியல் நாடகங்கள் மிகுந்த நகைச்சுவை யுடையனவாக இயற்றப் பெற்றன. இத்தகைய நாடகங்கள் ஏறக் குறைய ஐயாயிரம் 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப் பட்டனவாகத் தெரிகிறது. நாடகாசிரியர் பண்டை நாடகங்களில் சந்தர்ப்பங்களையும் பாத்திரங்களையும் தங்கள் காலத்துக்குத் தக்கவாறு திரித்து அமைக்கலாயினர். பண்டை நாடகங்களில் காணப்பட்ட சிறந்த குறிக்கோளை நாடும் வீரர்களை இந்த நாடக அரங்கில் காண முடியாது.

15 ஆம் நூற்றாண்டில் பேர் பெற்றிருந்த நாடகா ஆசிரியர்கள் மாக்கியவெல்லி (1469 - 1527) ஆரியா ஸ்ட்டோ (1474 - 1533), ஆரட்டினோ

மாக்கியவெல்லி இரண்டு நாடகங்கள் பிளாட்டடஸ் நாடகங்களின் கதைகளை ஆதாரமாக வைத்து எழுதினார். இவற்றில் அறவுணர்ச்சி உண்டாக்கும் காட்சி ஒன்று கூடக் கிடையாது.

ஆரியாஸ்ட்டோ எழுதிய நாடகங்களுள் ஐந்து கிடைக்கின்றன.

இத்தகைய நாடகம் ஆரட்டினோ கையில் உச்சநிலை அடைந்தது. இவருடைய இத்தகைய திறமைக்காக அரசர்களும் போப்பாண்டவரும் இவரை ஆதரித்து வந்தனர்.

‘கலை இன்பியல்’ என்னும் புதிய வகை 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. நாடகத்தின் கதை இது. காட்சிகள் இவை என்று முன் கூட்டித் தீர்மானிப்பர். ஆனால், நாடகத்தை எழுதுவ