பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல் நவில்
அகநானூறு



அகம்., புறம் என்னும் பொருட் பாகுபாடு பற்றித் தொகுக்கப் பெற்றவை அகநானூறும் புறநானூறும். இவ் இரண்டும் அகவற் பாக்களினால் இயன்றவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை 'அகம்' உ என்னும் பெயரையே இத் தொகைநூல் பெற்றிருத்தல் இதன சிறப்பு நோக்கி எழுந்தது போலும், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் எட்டுத் தொகை நூல்களைக் கூறுமிடத்து, ‘நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு..’ என இந்நூலை முதலாவதாக எடுத்து ஓதுதலும் நோக்கத் தக்கது.

அகவற் பாவில் அமைந்த ஏனைய நூல்களிலும் இதன்கண் அமைந்த பாடல்கள் அடி அளவால் மிகவும் நீண்டவை இப் பாடல்கள் 13 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையும் கொண்டவை. எனவே, இதனை 'நெடுந்தொகை' எனவும் வழங்குவர்.

ஆய்ந்த கொள்கைத் தீம் தமிழ்ப் பாட்டு
நெடியவாகி அடி நிமிர்ந்து ஒழுகிய
இன்பப் பகுதி இன் பொருட் பாடல்
நானூறு எடுத்து நூல் நவில் புலவர்


---- ---- ---- ----

முன்னினர் தொகுத்த நல் நெடுந்தொகைக்கு'

என வரும் நூல் இறுதியிலுள்ள பாயிரப் பாடலும்,

'நெடுந் தொகை நானுறும் கருத்தினேடு முடிந்தன'

என வரும் நூல் இறுதிக் குறிப்பும், இப் பெயரையே