பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

செந்தமிழ் பெட்டகம்


அலெக்சாண்டர் ஹார்டி என்பவர் கிரேக்க முறைகளை விட்டுப் பிரெஞ்சுக் கருத்துகளை ஆதாரமாக வைத்து நாடகங்கள் இயற்றினார். இவருடைய நாடகங்களில் ஆபாசமில்லாதிருந்ததால் பெண்களும் பார்க்கச் சென்றனர்.

17 ஆம் நூற்றாண்டில் கார்னே (1606-1684) தோன்றியது. பிரெஞ்சு நாடக வரலாற்றில் ஒரு முக்கியக் கட்டமாகும். இவருடைய சிறந்த நாடகம் சிடு என்பது இன்று வரை நடிக்கப்பட்டு வருகிறது. அதுவே நல்ல நாடகத்தின் தலையாய பண்பு. இந்த நாடகம் துன்பியல் நாடகம். இவரே பொய்யன் என்னும் சிறந்த இன்பியல் நாடகமும் எழுதியுள்ளார். நாடக அரங்கைத் துய்மை செய்ய ஹார்டி தொடங்கிய வேலையை இவர் தொடர்ந்து செய்தார். இவர் சிக்கலான கதைக் கருவைச் சிறிது சிறிதாக விளங்குமாறு செய்வதில் மிகுந்த திறமையுடையவர்.

பிரெஞ்சு துன்பியல் நாடகாசிரியர்களுள் சிறந்த மற்றொரு நாடகாசிரியர் ரசீன் (1639-1699) என்பவர். இவர் மனிதனுடைய குணங்களைச் சித்திரிப்பதிலும் நாடகப் பாத்திரங்களுடைய மனத்தைப் பிணிக்கத்தக்க நிகழ்ச்சிகளை நடத்திவைப்பதிலும் புகழ் பெற்றவர். இவர் நாடகங்களில் சிறந்தவை ஆண்ட் ரொமாக், பெட்ரு என்பன.

பிரெஞ்சு இன்பியல் நாடகாசிரியர்கள் பெரும்பாலும் இத்தாலி, ஸ்பெயின் நாட்டுக் கதைகளையே பயன்படுத்தினர். ஏராளமான இன்பியல் நாடகங்கள் தோன்றின. உலகப் புகழ்பெற்ற மோலியர் (1621-73) என்பவரே இவருள் சிறந்தவர். நாடகாசிரியர் தம் காலத்தைச் சித்திரிப்பதே கடன் என்பதை வற்புறுத்தினார். இவர் இன்பியல் நாடகங்களில் பலவகைகள் இயற்றியுள்ளார். இவருடைய தலை சிறந்த திறமை பாத்திரங்களின் குணங்களைச் சித்திரிப்பதிலேயே விளங்கும். இவருக்குப் பின்வந்த எல்லா நாட்டு