பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

89


நாடகாசிரியர்களும் இவருக்குக் கடன்பட்டவராகவே உளர். ஷேக்ஸ்பியர் நாடகங்களை இக்காலத்தில் ஏதேனும் மாறுதல் செய்யாமல் நடிக்க முடியாது. ஆனால், மோலியருடைய நாடகங்களை எந்தக் காலத்திலும் சிறிதும் மாற்றாமல் நடிக்கலாம்

நாடகாசிரியர்கள் செய்யுள் நடையை விட்டு உரை நடையையே பயன்படுத்தினர். நடனமும் இசையும சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் முற்றிலும் மறையலாயின.

18 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் நிலையான நாடக அரங்குகள் உண்டாயின. நாடகங்கள் பெருகின; புதுவகை நாடகங்கள் தோன்றின. நாளடைவில் நாடகக் கலை நலிவு பெறத் தொடங்கியது. ஆயினும் அக்காலத்தில், பேர் பெற்ற அறிஞராயிருந்த வால்ட்டேர் (1694-1778) பல சிறந்த நாடகங்கள் எழுதினார். ஸாயீர் (1732), மெரப்பீ (1734) என்பன அவருடைய மிகச் சிறந்த துன்பியல் நாடகங்கள்.

18 ஆம் நூற்றாண்டில் சிறந்த இன்பியல் நாடகங்கள் தோன்றவில்லை. பிரெஞ்சு நாடக அரங்குகள் அக்காலத்து ஆங்கில நாடக அரங்கத்தினும் தூய்மையுடையதாக இருந்தது. இந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்த சிறந்த நாடகாசிரியரான போமார்ஷே (1732-1799) என்பவர் எழுதிய செவில் நகரத்து அம்பட்டன் என்பதும் பிகாரோவின் மணம் என்பதும் உலகப் புகழ் பெற்ற இன்பியல் நாடகங்கள்.

19 ஆம் நூற்றாண்டில் பாவனிநவிற்சி என்பது ஐரோப்பிய நாடுகளில் மிகுந்த செல்வாக்குடையதாக இருந்தது. அதன் முக்கியக் கருத்துக்கள் மனிதன் தனிப்பட்ட நிலையில் முக்கியத்துவமும் பெருமையும் உடையவன் என்பதும்,இயற்கை மனிதனக்கு ஆறுதலும் ஊக்கமும் அளிக்கும் ஆற்றலுடையது என்பதுமாகும்.

இந்த இயக்கத்தின் நாடகங்கள் படிக்கவும் நடிக்கவும் சிறந்தவை. இந்த இயக்கத்தை அலெக்சாண்டர் டூமாஸ்