பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

91


இந்த இரண்டு பண்புகளும் பிற்காலத்து ஸ்பானிய நாடகத்தின் முக்கிய அமிசங்களாகும்.

டாரெஸ் நா. ஆரோ என்பவர் பாவனை நவிற்சி, இயற்கை என்னும் இரண்டு வகையாலும் இன்பியல் நாடகங்கள் இயற்றினார். சூழ்ச்சி இன்பியல் நாடகம் என்பதை நிலைநாட்டினார்.

இவர் காலம் வரை நாடகங்கள் பிரபுக்களின் பொழுது போக்குக்காகவே எழுதப்பட்டு வந்தன. அதனுடன் பெரும்பாலான நாடகங்கள் சமய சம்மந்தமானவையாகவுமிருந்தன.சமய சம்பந்தமில்லாதவற்றைக் கிறிஸ்தவ சபை தடை செய்தது.

ஆனால் 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நாடகமானது திடீரென்று அரண்மனைகளை விட்டு மக்களிடையே வருவதாயிற்று. இலக்கிய வகைகளில் நாடகமே மிகுந்த செல்வாக்குடையதாக விளங்கிற்று. லோப் பே ட ரூவேடா என்பவர் தேசிய நாடக அரங்கு ஏற்படுவதற்குக் காரணமாயினர். இவர் இத்தாலிய நாவல்களை நாடகமாக்கினார். இவருடைய நகைச்சுவைப் பேச்சுக்கள் நாடகத்தில் விதுரஷகன் என்ற பாத்திரம் எழுவதற்கு வழகோலின. இவர் தேசிய உணர்ச்சியை ஊட்டினர். மக்களை நாடகத்தில் ஊக்கம் காட்டுமாறு செய்தார். ஹூவான் ட லா குவேவா என்பவர் தம் நாடகங்களை 4 அங்கங்களாக வகுத்தார். இவர் செய்த சேவை தேசியப் புராணக் கதைகளை நாடகப் பொருளாகப் பயன் படுத்தியதாகும். இவருக்குப் பின் வந்த சர்வான் டீஸ் ஒவ்வொரு நாடகத்தையும் மூன்று அங்கங்கள் மட்டும் உடையதாகச் செய்தார். இந்த வழக்கம் நிலைத்தது.

இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் போல் ஸ்பெயினில் லோப்பே ட வேகா என்பவர் மிகச் சிறந்த நாடகாசிரியராகத் தோன்றினார்.

இவர் 1562-ல் பிறந்தார். 12 ஆம் வயதிலேயே முதல் நாடகத்தை வரைந்தார். இவர் எழுதியவை 1800