பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

செந்தமிழ் பெட்டகம்


நாடகங்கள். அவற்றுள் இப்போது கிடைப்பன நானுறு. உணர்ச்சிக்குத் தகுந்தவாறு செய்யுளின் யாப்பை மாற்றினார். ஸ்பானிய இன்பியல் நாடக வகையை உண்டாக்கியவர் ரூவேடா எனினும், அதை உச்சநிலை அடையுமாறு செய்தவர் இவரே. இவருடைய நாடகப் பாத்திரங்கள் பல திறப்பட்டவை. ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படையான கருத்து, காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தல் என்பதே. இவருடைய பாத்திரங்கள் அழியாத் தன்மையுடையனவல்ல. அதற்குக் காரணம் தம் நாடகங்களைப் பொது மக்களின் பொழுது போக்கிற்காகவே இயற்றியதுதான். பொது மக்கள் சூழ்ச்சி நிறைந்த கதைகளையே விரும்புவர்.

இவருக்குப் பின்வந்த கேப்ரியல் டேலியத் (1571-1648) பாத்திரங்களின் பண்புகளைச் சித்திரிப்பதில் சிறந்தவர். ஹூவான் ரூயெத் டே ஆலார்க் கோன் என்னும் கூனர் பாத்திரங்களின் குண சித்திரேமே பிரதானம் என்ற கருத்தை நிலைநாட்டினார்.

கால்டரான் (1600-1683) என்பவர் சமய நாடகங்களை ஒரங்க உவமைக்கதை நாடகங்களாக எழுதினார். இவர் மேல் தரத்து மக்களுக்காகப் பல சமயச் சார்பற்ற நாடகங்கள் எழுதினார். இவர் கதைக்கருவை மிகுந்த திறமையுடன் அமைத்துள்ளார். இவருடைய நடை மிகச் சிறந்தது. ஆனால் நகைசுவை இல்லை.பொது மக்களுடன் தொடர்பு கிடையாது. அதனால் இவருடைய நாடகங்கள் லோப்பே என்பவருடைய நாடகங்கள் போல் பொது மக்களிடம் செல்வாக்குப் பெறவில்லை.

இவர் 1681-ல் இறந்தார். அதன்பின் நாடு நலிவுற்றது. அதனால் ஒவியம் தவிர, மற்றக் கலைகள் எல்லாம் குன்றின. நாடகாசிரியர்கள் பிரெஞ்சு நாடகங்களைத் தழுவி எழுதலாயினர். 19ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய நாடகம் புத்துயிர் பெற்றெழுந்தது.