பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

93


பேனாவென்டே (1866-?) என்பவர் ஸ்பெயின் நாட்டுத் தலைசிறந்த நாடகாசிரியராக இருக்கிறார். இவருடைய நாடகங்கள் ஸ்பெயின நாட்டு மக்களின் சிறப்பியல்புகளை எல்லாம் நன்கு சித்திரிப்பன. இவர் 1922-ல் நோபெல் பரிசு பெற்றார்.

இக்காலத்துச் சிறந்த நாடகாசிரியர்களுள் மற்றொருவர் லுய்கி பிராண்டெல்லோ (1867-1936) என்பவருடைய நாடகங்கள் பெரும்பாலும் தத்துவக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவை. இவருடைய நாடகங்களுள்மிகப் புகழ்பெற்றது. ஆசிரியரைத் தேடி ஆறு பாத்திரங்கள் என்பதாகும்.

ஜெர்மனி :

நாடகத்தின் வரலாறு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் 13 ஆம் நூற்றாண்டு வரை ஒன்றாகவேயிருந்தது என்று கண்டோம். சமயத் தொடர்புள்ள நாடகம் ஜெர்மனியில் நாடக வளர்ச்சிக்குப் பெருந் துணை செய்தது. ஈஸ்ட்டர் நாடகங்கள் என்பவற்றில் இன்பியலும், பாஷன் நாடகங்கள் என்பவற்றில் அறபோதனையும் கலந்தன. 15 ஆம் நூற்றாண்டில் சமய நாடகம் இலக்கியச் சுவை உடையதாக ஆயிற்று. இது 16ஆம் நூற்றாண்டில் போப்பாண்டவரைக் கண்டிக்கப் பயன்பட்டது. கிறிஸ்தவ சமயச் சீர்திருத்தம் என்பதை எதிர்த்தவர்களும் நாடகத்தைப் பயன்படுத்தினர்.

சமய சம்பந்தமில்லாத நாடகங்கள் எழுதத் தொடங்கியவர்களில் முக்கியமானவர் ஹான்ஸ் ஸாக்ஸ் (1491-1576) என்பவர்.இவர் 200 நாடகங்கள் செய்துள்ளார். இவருடைய நாடக அமைப்பு முந்தியவர்களுடையதை விடச் சிறந்திருந்தது.

இவர் காலத்துக்குப்பின் இருநூறு ஆண்டுகள் ஜெர்மனியில் நாடகக்கலை நலிந்தேயிருந்தது. ஷேக்ஸ்பியருடைய 'ஹாம்லெட்’ போன்ற சில