பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

95


நாடகாசிரியர்கள் கோதே (1749-1832) என்பவருமாவார். கோதே சிறந்த நாடகங்கள் எழுதியதுடன் பிரெஞ்சு, ஆங்கில, கிரேக்க, ரோமானி நாடகங்களை நடிக்குமாறும் செய்தார். ஷில்லருடைய மிகச் சிறந்த நாடகம் வில்லியம் டெல் என்பது.

இவர்களுக்குப் பின் வந்தவர்களுள் கிளைஸ்ட் (17771811) என்பவர் எழுதிய நாடகங்களுள் சிறந்தது ஹாம்புர்க் இளவரசன் என்பது. இவர் பிரஷ்யாவில் தோன்றிய சிறந்த நாடகாசிரியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிரில்பார்ட்ஸர் (1791-1872) என்பவர் நாடகங்கள் இன்றும் ஐரோப்பாவில் நடிக்கப்படுகின்றன.

19ஆம் நூற்றாண்டின் நடுவில் சிறந்தவராக இருந்த ஹெபல் (1813-1863) என்பவருடைய நாடகவியற் கருத்துகள் இப்சென் கருத்துக்களுக்கு அடிகோலின. நாடகம் நடிப்பின் மூலம் போதிக்க வேண்டும் என்றனர். அரிஸ்டாட்டிலின் பின்னர் நாடகவியலை நன்கு பரிசீலித்தவர் பிரைட்டார் (1816-1895) என்பவர்.

ஜெர்மனி இப்செனுடைய நாடகங்களின் சிறப்பை முதன் முதல் உணர்ந்த நாடு. அதுவே புதிய கருத்துகள் படி நாடகங்கள் எழுதியது. அக்கருத்துக்கேற்ப முதலில் எழுதியவர் ஹெளப்ட்மான் (1882-1946) இவருடைய சிறந்த நாடகம் நெசவாளர் என்பது.

ரஷ்யா :

19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ரஷ்யாவில் பொம்மலாட்டங்கள், பிரகசனங்கள்,சமய நாடகங்கள் முதலியன நடைபெற்று வந்த போதிலும், அவற்றைப் பற்றி மற்ற நாடுகளுக்கு யாதொன்றும் தெரியாமலிருந்தது.

17 ஆம் நூற்றாண்டில் சார்அலிக்சிஸ் என்னும் சக்கரவர்த்தி தம் குமாரன் பிறந்த தின விழாவுக்காக ஒரு