பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

97


அவற்றுள் தலை சிறந்தது. இருள் சக்தி என எல்லோராலும் போற்றப்படுகிறது.

அலிக்சியே டால்ஸ்ட்டாய் மூன்று வரலாற்றுத் துன்பியல் நாடகங்கள் செய்யுள் நடையில் எழுதினார் கார்க்கி என்னும் புனைபெயருடைய அலிக்சி பெஷக்காவ் என்பவர் மிகச் சிறந்த நாவலாசிரியர்.இவர் பல நாடகங்கள் எழுதினார். அவற்றுள் இயற்கை நவிற்சிச் சிறப்புடைய கீழ் ஆழம் என்பது போற்றப்படுகிறது. ஆண்டன் செஹாவ் எழுதிய செர்றித் தோட்டம் பல மொழிகளில் பெயர்க்கப் பெற்றுள்து. இவருடைய நாடகங்களில் வீரர்கள் துன்மார்க்கர்கள் இலர். நன்மையும் தீமையும் போரிடுவதையே சித்தரிக்கின்றார். இவருடைய செல்வாக்குப் பல நாடுகளில் பரவியுளது.

சோவியத் ரஷ்யாவில் நாடகங்கள் ஏராளமாக இயற்றவும் நடிக்கவும் படுகின்றன. விவசாயப் பண்ணைகள் அனைத்திலும் நாடக அரங்குகள் நிறுவப் பெற்றுள்ளன.

நார்வே :

நார்வேயும் டென்மார்க்கும் 1814 -ல் தான் வேறு வேறுநாடுகளாகப் பிரிந்தன. அதுவரை இரண்டு நாடுகளிலும் ஒரே பொதுமொழி வழங்கிற்று. டென்மார்க்கின் தலைநகரமாகிய கோப்பன் ஹேகன் என்னும் ஊரில்தான் ஒரு நாடக அரங்கம் 1720-ல் நிறுவப்பட்டு நடந்து வந்தது. அதிலும் நீண்ட காலமாகப் பிரெஞ்சு நாடகங்களே நடிக்கப் பெற்றன. நாலாம் பிரடரிக் அரசர் தாம் ஹால்பர்கு (1681-1754) என்பரைத் தேசிய நாடகங்கள் எழுதுமாறு தூண்டினார். ஹால்கர்கு டேனிஷ் இலக்கியத் தந்தை என்று கருதப்படுகிறார்.

நார்வேயும் டென்மார்க்கும் தனி நாடுகளாக ஆன பின்னர், நார்வே மொழி இலக்கியம் செழிக்கலாயிற்று. ஐரோப்பியப் புகழ்பெற்ற முதல் நார்வே நாடகாசிரியர்

செ. பெ.-l-7