உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் மாலை காடுதொறும் ஒடிவரை ஆடுகுதி பாயும் காகமணு காமலையில் மேகதிரை சாயும் நீடுபல ஈசர்கயி லாசகிரி வாசர் நிலைதங்கும் திரிகூட மலையெங்கள் மலையே. கயிலையெனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை அம்மே சகலமலை யும் தனக்குள் அடக்குமலை அம்மே வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை அம்மே வான்இரவி முழைகள்தொறும் நுழையுமலை அம்மே துயிலுமவர் விழிப்பாகி அகிலமெங்கும் தேடும் துங்கர் திரி கூடமலை எங்கள்மலை அம்மே கொல்லிமலை எனக்கு இளைய செல்லிமலை அம்மே கொழுநனுக்குக் காணிமலை பழனிமலை அம்மே எல்உலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே இமயமலை என்னுடைய தமயன்மலை அம்மே சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே செல்லினங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும் திரிகூட மலையெங்கள் செல்வமலை அம்மே. ஞானிகளும் அறியார்கள் சித்ர நதி மூலம் நானறிந்த வகைசிறிது பேசக்கேள் அம்மே மேன்மை பெறும் திரிகூடத் தேனருவித் துறைக்கே மேவுமொரு சிவலிங்கம் தேவரக சியமாய் ஆனதுறை அயனுரைத்த தானமறி யாமல் அருந்தவத்துக் காய்த்தேடித் திரிந்தலையும் காலம் 7 23. 24. 25.