செந்தமிழ் மாலை மோனவா னவர்க்கெங்கள் கானவர்கள் காட்டும் முதுகங்கை ஆறுசிவ மதுகங்கை யாறே. 26 சிவமது கங்கையின் மகிமை புவனமெங்கும். புகழும் செண் பகா வித் துறையின் பண்பு சொல்லக் கேளாய் தவமுனிவர் கூட்டரவும் அவரிருக்கும் குகையும் சஞ்சீவி முதலான விஞ்சைமூ லிகையும் கவன சித்தர் ஆதியரும் மவுனயோ கியரும் கத்திருக்கும் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே நவநிதியும் விளையுமிடம் அவிடமது கலந்தால் நங்கைமார் குரவை யொலிப் பொங்குமா கடலே. 27. பொங்குகடல் திரிவேணி சங்கமெனச் செழிக்கும் பொருந்து சித்ர நதித் துறைகள் பொன்னு முத்தும் [கொழிக்கும் கங்கையெனும் வடஅருவி தங்கும் இந்த்ர சாபம் கலந்தாடிற் கழுநீராய்த் தொலைந் தோடும் பாபம் சங்கவீ தியிற்பரந்து சங்கினங்கள் மேயும் தழைத்தமதில் சிகர மெங்கும் கொழுத்தகயல் பாயும் கொங்கலர்செண் பகச்சோலைக் குறும்பலா வீசர் குற்றாலத் திரிகூடத் தலமெங்கள் தலமே. குறவன் குறத்தி கூற்று இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல் 28. எங்கே நடந்தாய் நீ சிங்கி (எங்கே நடந்தாய் நீ ) 29. கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக் குறிசொல்லப் போனனடா சிங்கா (குறிசொல்லப்போனனடா) 30.
பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/12
தோற்றம்